சீனியர்கள் முட்டுக்கட்டை.. பிளானை நிறைவேற்ற முடியாமல் திணறும் செந்தில் பாலாஜி?- கோவை திமுகவில் பரபர!
கோவை : கோவை மாவட்ட திமுகவில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த உட்கட்சி தேர்தலைப் பயன்படுத்தி பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி தயாராகி வருகிறார்.
செந்தில் பாலாஜியின் திட்டத்திற்கு திமுகவின் முக்கிய சீனியர்கள் முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது. தனக்கு வேண்டியவர்களை பொறுப்புக்கு கொண்டு வர செந்தில் பாலாஜி திட்டமிடுவதாக கோவை திமுகவினர் கொந்தளிக்கின்றனர்.
தனது ஆதரவாளர்களை மாவட்ட பொறுப்பாளர்களாக நியமித்து கோவையை முழு கண்ட்ரோலில் எடுக்கும் செந்தில் பாலாஜியின் திட்டம் டிலே ஆவதால் அவர் அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

உட்கட்சித் தேர்தல்
திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் அறிவிப்பு திமுக தலைமையில் இருந்து சமீபத்தில் வெளியானது. தி.மு.கவில் உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பல மாவட்டங்களில் குழப்பங்கள் நிலவி வருகின்றன. அசுர பலத்தோடு ஆட்சி அமைத்தும் உட்கட்சி தேர்தலை மையமாக வைத்து எழுந்து வரும் பூசல்களால் திமுக தலைவர் ஸ்டாலின் அதிருப்தி அடைந்துள்ளார். மாவட்ட பொறுப்பாளர்களை நேரடியாக அழைத்து மீட்டிங் போட்டும் மோதல் போக்குகளும், அடிமட்டத்திலிருந்து தலைமைக்கு புகார் வருவதும் குறையாததால் குழம்பிப் போயுள்ளது தலைமை.

கொங்கு மண்டலம்
அதிமுகவுக்கு பலம் வாய்ந்ததாக கருதப்படும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரியை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் 2021ஆம் ஆண்டு தேர்தலிலும் திமுக கோட்டைவிட்டது. கரூர் மாவட்டத்தில் மட்டுமே வெற்றி வாகை சூடியது திமுக. இதனால் கொங்கு மண்டலத்தை குறி வைத்து களமிறங்கினார் முதல்வர் ஸ்டாலின். அதற்காகவே செந்தில் பாலாஜியை பொறுப்பாளராக நியமித்து, கோவையில் திமுகவை பலப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, செந்தில் பாலாஜியும் முழுநேரமாக கோவையிலேயே களமிறங்கி பணியாற்றி வருகிறார்.

செந்தில் பாலாஜி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதும், முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பதும், ஆரம்பம் முதலே திமுகவின் சீனியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், கோவை திமுகவில் ஏற்பட்டு வரும் குழப்பத்தைப் பயன்படுத்தி செந்தில் பாலாஜிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்கள் என்கின்றனர் உடன்பிறப்புகள் சிலர்.

கமிட்டி
உட்கட்சித் தேர்தல், கழக மாவட்டப் பிரிப்பு தொடர்பான கட்சியினரின் புகார்களை விசாரிக்க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தலைமையால் நியமிக்கப்பட்டனர். சில காரணங்களால் கே.என்.நேரு இந்தப் பணிகளில் ஈடுபடவில்லை எனக் கூறப்படுகிறது. அதன்பிறகு தங்கம் தென்னரசுவும் அமைச்சகப் பணிகள் காரணமாக கழன்றுகொள்ள, தற்போது ஆ.ராசாவுடன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், என்.ஆர்.இளங்கோவும் இணைந்து இதுகுறித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

கோவை திமுக
கோவையைப் பொறுத்தவரை திமுகவில் மாநகர் கிழக்கு, மேற்கு, புறநகர் வடக்கு, கிழக்கு, தெற்கு என ஐந்து கழக மாவட்டங்கள் உள்ளன. நிர்வாக வசதிக்காக ஐந்தை மூன்றாக இணைக்க பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டமிட்டு வருவதாகவும், மூன்றிலும், தனக்கு தோதான ஆட்களை மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்க இருப்பதாகவும் செய்திகள் வட்டமடித்தன.

கட்டையைப் போடும் சீனியர்கள்
செந்தில் பாலாஜியின் இந்த முடிவுக்குத்தான் குறுக்கே கட்டையைப் போட்டு வருகிறார்களாம் திமுக சீனியர்கள். கோவை கழக மாவட்டங்களை மூன்றாகப் பிரிக்கும் திட்டத்திற்கு செந்தில் பாலாஜி முன்வைக்கும் வாதங்களுக்கு எதிரான ரூட்டில் கருத்துச் சொல்லி, அவரது திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்களாம். இதனால், தனது ஆதரவாளர்களை மாவட்ட பொறுப்பாளர்களாக நியமித்து கோவையை முழு கண்ட்ரோலில் எடுக்கும் செந்தில் பாலாஜியின் திட்டம் டிலே ஆவதால் அவர் அப்செட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

தலைமைக்கு நேரடியாக
இந்த விவகாரத்தில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை என்றால், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குக் காரணம் என முக்கியமான பட்டியலைப் போட்டு, இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினையே நேரடியாக சந்தித்துப் பேசவும் தயார் ஆவார் செந்தில் பாலாஜி என்கின்றனர் கள நிலவரம் அறிந்த கோவை திமுகவினர்.
-
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி












Click it and Unblock the Notifications