கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை குண்டுவெடிப்பு.. மக்களை காக்க தவறிவிட்டோம்.. பிரதமர் ரணில் பகிரங்க மன்னிப்பு

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பிற்கு அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பிற்கு அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

SL PM Ranil Wickremesinghe apologies for the bomb Blast

இதில் மொத்தம் 450 பேர் படுகாயம் அடைந்தார்கள். கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது.

இந்த தாக்குதல் குறித்து இலங்கை அரசுக்கு அந்நாட்டு உளவுத்துறை ஏற்கனேவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஏப்ரல் முதல் வாரத்தில் இது தொடர்பாக முதல்முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி தாக்குதல் நடந்தது.

இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு அந்நாட்டு அதிபர் சிறிசேனா முன்பே மன்னிப்பு கேட்டு இருந்தார். அதன்படி இந்த தாக்குதல் பாதுகாப்பு குறைபாட்டால் நடந்துவிட்டது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து தற்போது இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பிற்கு அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட் செய்துள்ளார்.

இலங்கை குண்டுவெடிப்பிற்கு எங்களின் பாதுகாப்பு குறைபாடுதான் காரணம். மக்களை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துவிட்டோம். இதற்காக மன்னிப்பு கேற்கிறோம். அனைத்து தேவாலயங்களையும் மீண்டும் நாங்கள் கட்டி எழுப்புவோம்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் சீர்படுத்துவோம். தீவிரவாதத்தை ஒழிக்க நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். உலக நாடுகளின் உதவியுடன் தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று ரணில் விக்ரமசிங்கே குறிப்பிட்டுள்ளார்.

English summary
We take collective responsibility and apologise to our fellow citizens for our failure to protect victims of these tragic events. We pledge to rebuild our churches, revive our economy, and take all measures to prevent terrorism, with the support of the international community, says SL PM Ranil Wickremesinghe
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X