Just In
தமிழக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் மீது தாக்குதலா? இலங்கை ராணுவம் மறுப்பு
கொழும்பு: தமிழக திரைப்பட இயக்குநர் மு. களஞ்சியம் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மாவீரர் நாளை முன்னிட்டு அண்மையில் இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தார் களஞ்சியம். அங்கிருந்து கொழும்பு திரும்பும் போது தம்மை இலங்கை ராணுவம் தாக்கியது என கூறியிருந்தார் களஞ்சியம்.

மேலும் உங்க தலைவர் சீமானா? புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கத்தான் வந்துள்ளீர்களா? என கேட்டு தாம் தாக்கப்பட்டதாக களஞ்சியம் கூறியிருந்தார். ஆனால் இத்தாக்குதல் சம்பவத்தை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் சுமித் அத்தபத்து இப்படியான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்றார்.
நித்யானந்தா எங்கே இருக்கிறார்?.. கைலாசா வெப்சைட் ஐ.பி. அட்ரஸை வைத்து கண்டுபிடிப்பு.. பரபர தகவல்கள்