கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊதியத்திற்காக வேலை செய்யாதீர்.. கள்ளக்குறிச்சி சம்பவத்தால் அவப்பெயர்..அமைச்சர் அன்பில் மகேஷ் அட்வைஸ்

Google Oneindia Tamil News

கடலூர்: கல்வி அதிகாரிகள் ஊதியத்திற்காக வேலை செய்யாமல் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சார்நத பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் உட்பட கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FACT CHECK: அமைச்சர் அன்பில் காருக்காக.. ஆம்புலன்ஸ் காக்க வைக்கப்பட்டதா? அணைக்கரையில் நடந்தது என்ன? FACT CHECK: அமைச்சர் அன்பில் காருக்காக.. ஆம்புலன்ஸ் காக்க வைக்கப்பட்டதா? அணைக்கரையில் நடந்தது என்ன?

ஆய்வு நடத்துக

ஆய்வு நடத்துக

இதில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது இருக்கும் சூழ்நிலையில் பள்ளி கல்வி துறைக்கு மக்கள் மற்றும் ஊடக்கத்தில் பாராட்டும் மற்றும் விமர்சனங்கள் இரண்டும் வந்து கொண்டுதான் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள சிஇஓ, டிஇஓ ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிக்கு நேரடியாக சென்று அடிக்கடி ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு அறிவுரை

ஆசிரியர்களுக்கு அறிவுரை

தொடர்ந்து, பள்ளிகளில் நடத்தப்படும் ஆய்வின் போது சிஇஓ, தலைமை ஆசிரியர்களை சிலர் கோபத்துடன் கேள்விகள் கேட்பார்கள். அது தனிப்பட்ட பிரச்னையாக கருதக்கூடாது. பள்ளியின் வளர்ச்சிக்காக என்று கருத வேண்டும். சிஇஓ-க்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்து கற்றல் திறன் குறித்து விவாதிக்க வேண்டும். கற்றல் திறனை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி விவகாரம்

கள்ளக்குறிச்சி விவகாரம்

அதேபோல், பள்ளி கல்வித்துறை நல்ல பெயர் எடுத்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பள்ளி கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. ஒரு பிரச்னை ஏற்பட்டால் 24 மணி நேரத்தில் என்ன நடந்தது என்று கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும். அதுமட்டுமல்லால் பிரச்னைகள் குறித்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.

Recommended Video

    Kallakurichi பள்ளி மாணவி பெற்றோரை நேரில் சந்தித்த Anbil Mahesh Poyyamozhi.. ஏன்?
    சம்பளத்திற்காக வேலை செய்யாதீர்கள்

    சம்பளத்திற்காக வேலை செய்யாதீர்கள்

    3 மாவட்டங்களிலும் பின்தங்கிய மாணவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் கடலூர் மாவட்டம் தான். அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும்தான் பள்ளி சிறப்பாக செயல்படுவதாக பேசப்பட்டு வரும் நிலையை மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஊதியத்திற்காக வேலை செய்யாமல், தாங்கள் இருக்கும் துறையில் கல்வியில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

    English summary
    In Neyveli, Cuddalore District, a zonal level study meeting was held on the activities of schools in Cuddalore, Villupuram and Kallakurichi districts. Minister Anbil Mahesh has advised that education officials should not work for salary and work towards creating change.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X