கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கஞ்சா மணியும் காவல்துறையும்.. பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்.. 2020ல் கடலூர் டாப் 10!

Google Oneindia Tamil News

கடலூர்: 2021 புதுவருடம் பிறக்க உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்புகளை பார்க்கலாம்.

கஞ்சா மணியும் காவல்துறையும் முதல் இடத்தில் உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் ஓ.. என்னையே புடிக்க வர்றியா.. நான் யார் தெரியுமா.. நானே இப்பதான் ஜெயில்ல இருந்து வெளியே வந்திருக்கேன்.. கஞ்சா விக்கிற இடத்துல உனக்கு என்ன வேலை" என்று சிஐஎஸ்எப் வீரரை தகாத வார்த்தைகளால் திட்டி.. கத்தியால் குத்தி.. இன்னொரு வீரரையும் முட்டி போடவைத்த கஞ்சா மணி கைது செய்யப்பட்டான்

முட்டையை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டவுடன் முட்டைகளை துப்பிய சம்பவம் 2 ஆம் இடத்தில் உள்ளது கடலூர் அருகே உள்ள பூலோகநாதர் கோவில் என்ற இடத்தில் பைஜான் என்பவரது வீட்டில் அடைகாத்த கோழியை கொன்று விட்டு முட்டைகளை விழுங்கிய பாம்பு, பிடிபட்டவுடன் முட்டைகளை வெளியில் துப்பிய காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலானது

தந்தைக்கு அடி

தந்தைக்கு அடி

லுங்கியை மடித்து கட்டி.. பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்.. சொத்துக்காக நடந்த கடலூர் ஷாக் 3ஆம் இடத்தில் உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கீழ்அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் அவரது மகன்கள் இருவரும் சொத்து வேண்டும் என்று கேட்டு கொடூரமாக தாக்கும் வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து நீதி கேட்டார். மகன்கள் தன்னை தாக்குவது குறித்து ஆதாரத்துடன் போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதால், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதைவிட அடுத்தக்கட்ட அதிர்ச்சியில் நம்மை ஆழ்த்தி உள்ளது.

இன்ஸ்பெக்டர் வனஜா

இன்ஸ்பெக்டர் வனஜா

"உன் மனுவை விசாரிக்க முடியாது , போலீஸ்காரர்களின் சண்டை 4ஆம் இடத்தில் உள்ளது. கடலூர் அருகே தனது மனைவி கொடுத்த புகாரை விரைவாக விசாரிக்க சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் பிரபுவை தகாத வார்த்தையில் திட்டினார் இன்ஸ்பெக்டர் வனஜா . ஒரு கட்டத்தில் அரைஞ்சிடுவேன், செருப்பால அடிப்பேன் என்றும் பிரபுவை சொல்கிறார். இவர்கள் இப்படி ஸ்டேஷனுக்குள்ளேயே தகராறு செய்து கொண்டதை அங்கிருந்தோர் வீடியோவும் எடுத்தனர். இந்த வீடியோ வைரலாகி காவல்துறை வட்டாரத்தில் மட்டுமல்ல, தமிழக மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

கொரோனா ஓவியம்

கொரோனா ஓவியம்

கொரோனா விழிப்புணர்வு, நடு ரோட்டில்.. 3,400 சதுர அடியில் பிரம்மாண்ட ஓவியம்! 5ஆம் இடத்தை பிடித்துள்ளது கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சாலையில் நடுவே 3,400 சதுர அடியில் பிரம்மாண்ட ஓவியம் வரையப்பட்டது .

குடிகாரர்கள்

குடிகாரர்கள்

குடிகாரர்களை கிருமி நாசினி கொண்டு குளிப்பாட்டிய கடலூர் நகராட்சி. 6 ஆம் இடத்தில் உள்ளது. கடலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக 3 கி.மீ தூரத்திற்கு வரிசையில் நின்றிருந்த குடிகாரர்கள் மீது நகராட்சி ஊழியர்கள் லாரி மூலம் கிருமி நாசினியை பீய்ச்சி அடித்தனர் .கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

என்எல்சி விபத்து

என்எல்சி விபத்து

7ஆம் இடத்தில் என்எல்சி பாய்லர் வெடி விபத்து - 13 பேர் உடல் கருகி மரணமடைந்த சம்பவம் உள்ளது. நெய்வேலியில் உள்ள என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர். இவர்களில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

கடலூரில் மளிகை பொருட்களை கடன் கேட்டு.. வீச்சரிவாளுடன் மிரட்டும் நபர் 8ஆம் இடத்தில் உள்ளார். கடலூர் முதுநகரில் ராஜா என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரிடம் தினந்தோறும் இமயன் என்பவர் கடனுக்கு மளிகை பொருட்களை கேட்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாக இப்போ கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் இமயன்

விசாரித்த முதல்வர்

விசாரித்த முதல்வர்

சாப்பாடு எல்லாம் குடுத்தாங்களா... பாசத்தோடு கேட்ட முதல்வர் 9ஆம் இடத்தில் உள்ளார். கடலூர் மாவட்டத்தில் நிவர் புயல் பாதிப்பால் முகாமில் தங்கவைக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி .மேலும் உடம்பு பரவாயில்லையா? கால் வலிக்குதா? கை வலிக்குதா என்று முதியவர் ஒருவரிடம் முதல்வர் பழனிச்சாமி கனிவோடு விசாரித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது

சிதம்பரம் கோவில்

சிதம்பரம் கோவில்

சிதம்பரத்தில் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய ஆகாய தலமான நடராஜர் ஆலயம் 10ஆம் இடத்தில் உள்ளது. புரேவி புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 செ.மீ மழை பதிவாகியது தொடர்ந்து பெய்த கனமழையால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் வெள்ளநீர் சூழ்ந்தது. ஆகாய தலமான நடராஜர் ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியது . கோவிலுக்குள் சாமி கும்பிட வந்த பக்தர்களின் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. இது தான் மக்களே 2020 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் . நீங்களும் கடலூரில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை கமெண்ட் செய்யுங்கள்.

English summary
flashback 2020: top news news in cuddalore district in 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X