டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8 வயதில் ஜனாதிபதியிடம் விருது.. ஐன்ஸ்டீனை விட அதிக IQ லெவல்.. யார் இந்த ரிஷி ஷிவ் பிரசன்னா?

Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் 8 வயதிலேயே பால் புரஸ்கார் விருதை பெற்று சாதனை படைத்திருக்கிறார் 8 வயதாகும் ரிஷி ஷிவ் பிரசன்னா. அதுமட்டுமல்லாமல் சிறிய வயதிலேயே 3 ஆப்களை டிசைன் செய்துள்ள ரிஷி ஷிவ் பிரசன்னாவின் IQ சதவிகிதம் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் IQ சதவிகிதத்தைவிட அதிகமாக இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு சார்பில் புதுமை, சமூக சேவை, கல்வி, விளையாட்டு , கலை, வீரம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பிரிவுகளில் சாதனைகள் படைக்கும் குழந்தைகளுக்கு பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் 8 வயதேயான பெங்களூருவைச் சேர்ந்த ரிஷி ஷிவ் பிரசன்னா என்ற சிறுவனுக்கு பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் கைகளால் நேரடியாக பால் புரஸ்கார் விருதினை ரிஷி ஷிவ் பிரசன்னா பெற்றுள்ளார். சிறு வயதிலேயே குடியரசுத் தலைவர் கைகளால் விருது வாங்கிய சிறுவன் யார் என்று ஏராளமானோர் தேடி வருகின்றனர்.

இந்தியாவில் 2022ல் கூகுளில் அதிக தேடல்.. திரெளபதி முர்முவை முந்திய நுபுர்சர்மா..இதோ டாப் 10 லிஸ்ட்! இந்தியாவில் 2022ல் கூகுளில் அதிக தேடல்.. திரெளபதி முர்முவை முந்திய நுபுர்சர்மா..இதோ டாப் 10 லிஸ்ட்!

பால் புரஸ்கார் விருது

பால் புரஸ்கார் விருது

8 வயதாகும் சிறுவனான ரிஷி ஷிவ் பிரசன்னா இதுவரை 3 ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். 2 வயதிலேயே வாசிக்க கற்றுக் கொண்ட ரிஷி ஷிவ் பிரசன்னா, மிக வேகமாக புத்தகங்களை வாசிக்க தொடங்கி இருக்கிறார். அதன் விளைவாக 5 வயதிலேயே ஹாரி பாட்டர் புத்தகத்தை வாசித்து முடித்திருக்கிறார்.

IQ சோதனை

IQ சோதனை

இதனிடையே ரிஷி ஷிவ் பிரசன்னாவுக்கு IQ சோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது இவருக்கு கிடைத்த மதிப்பெண் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் IQ 130ஆக இருந்த நிலையில், ரிஷி ஷிவ் பிரசன்னாவின் மதிப்பெண் 180 ஆக வந்திருக்கிறது. இதன் மூலம் அறிவுசார் சமூகம் என்று கருதப்படும் மென்சாவில் உறுப்பினராகவும் சேர்ந்தார்.

 மென்சா அமைப்பு

மென்சா அமைப்பு

அந்த அமைப்பில் அவர் சேரும் போதும் ரிஷி ஷிவ் பிரசன்னாவின் 4.5 வயது மட்டுமே. மென்சா அமைப்பு என்பது லாப நோக்கமற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது தரப்படுத்தப்பட்ட IQவில் 98 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்காக மட்டுமே திறக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

3 ஆப்கள்

3 ஆப்கள்

இதனைத் தொடர்ந்து 5 வயது முதல் கம்ப்யூட்டரில் கோடிங் கற்றுக்கொண்ட இவர் IQ Test App என்ற அப்ளிகேஷனையும் குழந்தைகளுக்காக டிசைன் செய்திருக்கிறார். அதன்பிறகு Countries of the world என்ற அப்ளிகேஷனையும் வெளியிட்டிருக்கிறார். பின்னர் 6 வயதான போது கொரோனா பரவலின் போது பெங்களூருவை சேர்ந்த மக்களுக்கு உதவ CHB என்ற அப்ளிகேஷனையும் கண்டுபிடித்திருக்கிறார்.

 விஞ்ஞானி கனவு

விஞ்ஞானி கனவு

எதிர்காலத்தில் விஞ்ஞானியாக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், புத்தகங்களை வாசிப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.. இந்த நிலையில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கைகளில் இருந்து பால் புரஸ்கார் விருதினை ரிஷி ஷிவ் பிரசன்னா பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் ரிஷி ஷிவ் பிரசன்னா, அதில் அறிவியல் சார்ந்த செய்திகளை பகிர்ந்து வருகிறார்.

English summary
8-year-old Rishi Shiv Prasanna has set a record by receiving the Bal Puraskar award from President Draupathi Murmu at the age of 8. Apart from that Rishi Shiv Prasanna who has designed 3 apps at a young age has surprised many people that his IQ percentage is higher than that of the world famous physicist Albert Einstein.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X