டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது திட்டமிட்ட செயல்.. உறவில் பெரும் விரிசல் வரும்.. சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் வார்னிங்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்- சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசியில் பேசினார்கள். கிழக்கு லடாக்கின் நிலைமை குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விவாதித்தனர். அப்போது சீன ராணுவத்தின் திட்டமிட்ட நடவடிக்கையால் இந்த சம்பவம் நடந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

Recommended Video

    இது திட்டமிட்ட செயல்.. சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் வார்னிங்!

    கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்கிழமை அதிகாலை வரை இந்தியா மற்றும் சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 22 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இருவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    சீன தரப்பில் 35 பேர் வரை இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சீன ராணுவம் உயிரிழப்பு மற்றும் காயம் குறித்து எந்த ஒரு அறிவிக்கையும் இது வரை வெளியிடவில்லை.

    இந்திய மண்ணை சீன ராணுவம் ஆக்கிரமித்தது எப்படி..பிரதமர் மோடி நாட்டுக்கு சொல்ல வேண்டும்..சோனியா காந்திஇந்திய மண்ணை சீன ராணுவம் ஆக்கிரமித்தது எப்படி..பிரதமர் மோடி நாட்டுக்கு சொல்ல வேண்டும்..சோனியா காந்தி

    தொலைப்பேசியில் பேச்சு

    தொலைப்பேசியில் பேச்சு

    அதேநேரம் இந்திய வீரர்கள் தான் அத்துமீறி முதலில் தாக்குதல் நடத்தியதாக அபாண்டமாக பழி போட்டது. எனினும் இந்தியாவடன் மோதலை தொடர விரும்பவில்லை என்றும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த விரும்புவதாகவும் சீனா அறிவித்தது. இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியிடம் தொலைப்பேசியில் பேசினார்.

    கண்டிப்புடன் எடுத்துரைத்தார்

    கண்டிப்புடன் எடுத்துரைத்தார்

    இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திகுறிப்பில், "வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியிடம் பேசும் போது, கல்வான் பள்ளத்தாக்கில் இது சீன ராணுவத்தால் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட நடவடிக்கை, திட்டமிட்ட நடவடிக்கைகளே இந்த மோதல் சம்பவங்களுக்கு காரணம். இதற்கு சீனா தான் பொறுப்பு என்று கண்டிப்புடன் எடுத்துரைத்தார்.

    படைகளை விலக்க ஒப்புதல்

    படைகளை விலக்க ஒப்புதல்

    ஒட்டுமொத்த நிலைமை பொறுப்பான முறையில் கையாளப்படும் என்று இந்தியா சீனா இரு தரப்பும் ஒப்புக்கொள்வது என பேசிக்கொண்டனர். அத்துடன் இரு தரப்பும் ஜூன் 6 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட படைகளை விலக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நேர்மையாக செயல்படுத்த வேண்டும் என்றும் ஒப்புக்கொண்டனர்.

    காலத்தின் தேவை அவசியம்

    காலத்தின் தேவை அவசியம்

    முன்னெப்போம் இல்லாத இந்த மோதல், இருதரப்பு உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன அமைச்சரிடம் அடிக்கோடிட்டுக் காட்டினார். சீன தரப்பு அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் சரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் காலத்தின் தேவை உள்ளது

    எல்லையை மதிக்க வேண்டும்

    எல்லையை மதிக்க வேண்டும்

    ஜூன் 6 ம் தேதி மூத்த தளபதிகள் எட்டிய புரிந்துணர்வை இரு தரப்பினரும் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்படுத்த வேண்டும். இரு தரப்பு படையினரும் இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும். சீன ராணுவத்தினர் எல்லைக்கட்டுபாட்ட கோட்டு பகுதியை (LAC) கண்டிப்பாக மதிக்க வேண்டும் மற்றும் கடைபிடிக்க வேண்டும் மற்றும் அதை மாற்ற ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று ஜெய் சங்கர் கூறினார்.

    சமாதானமாக செல்ல முடிவு

    சமாதானமாக செல்ல முடிவு

    மேலும இருவரும் பேச்சின் முடிவில், ஒட்டுமொத்த நிலைமை பொறுப்பான முறையில் கையாளப்படும் என்றும் இரு தரப்பினரும் ஜூன் 6 ஆம் தேதி படை விலக்கல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உண்மையாக செயல்படுத்துவதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளின்படி சமாதானத்தை உறுதிசெய்வதையொட்டி இரு தரப்பினரும் எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    English summary
    EAM S Jaishankar underlined that this unprecedented development will have a serious impact on the bilateral relationship. The need of the hour was for the Chinese side to reassess its actions and take corrective steps: MEA
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X