டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 இந்தியர்களும் உளவாளிகளாம்.. விடுவித்த கையோடு புழுகுமூட்டையை அவிழ்த்துவிட்ட சீன ஊடகம்!

Google Oneindia Tamil News

டெல்லி: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் வனப்பகுதியில் காணாமல் போனதாக சொல்லப்படும் 5 இந்தியர்களும் உளவாளிகள் என சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் இந்திய சீனா எல்லையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்குச் சிலர் வேட்டையாட சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த சீன ராணுவத்தினர் 5 பேரை பிடித்து அழைத்து சென்றதாக அந்நாட்டு ராணுவத்தினரிடம் இருந்து தப்பியவர்கள் தகவல் தெரிவித்தனர்.

காணாமல் போன 5 பேரும் தகின் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 5 பேரையும் சீனா இன்று இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டது.

எல்லைக் கோட்டு பகுதியில் ஏற்கெனவே நீடித்த நிலையே தொடர்கிறது.. பதற்றம் ஏதும் இல்லை எல்லைக் கோட்டு பகுதியில் ஏற்கெனவே நீடித்த நிலையே தொடர்கிறது.. பதற்றம் ஏதும் இல்லை

குளோபல் டைம்ஸ்

குளோபல் டைம்ஸ்

முன்னதாக இந்த நிலையில் காணாமல் போன 5 பேரும் இந்திய உளவாளிகள் என குளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த செய்தியில் சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்டதாக கூறப்படுவோர் இந்திய உளவாளிகள். சீனாவை உளவுபார்க்க வந்தவர்கள்.

உளவாளிகள்

உளவாளிகள்

அவர்கள் திபெத்தின் ஷன்னான் வழியாக இந்திய சீன எல்லையை தாண்டினர். சீனா குறித்து உளவு தகவல்களை சேகரிக்க இந்திய தரப்பு அவ்வப்போது வேட்டையாளர்கள் என்ற பெயரில் இதுபோன்ற உளவாளிகளை அனுப்பும். இப்படித்தான் சீன ஆதிக்கத்தில் உள்ள இடங்களை இந்தியா ஆக்கிரமித்துள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

அந்த 5 பேரையும் சீன ராணுவம் கைது செய்து, எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா சீனா எல்லை மிகவும் நீளமானதாகும். கடந்த காலங்களில் இங்கு பாதுகாப்பு பணியில் யாரும் இல்லை. ஆனால் அண்மைக்காலமாக இந்திய சீன எல்லை பகுதிகளில் இந்தியா ஆக்ரோஷமான அணுகுமுறையை எடுத்துள்ளதால் எல்லை பகுதியை வலிமைப்படுத்துவது சீனாவுக்கு கடும் சவாலாக உள்ளது.

Recommended Video

    China-வின் பொய் | '5 இந்தியர்களும் உளவாளிகளாம்'- சொல்வது Global Times | Oneindia Tamil
    தகவல்கள்

    தகவல்கள்

    இந்திய ராணுவத்தினரும் இந்திய ஊடகங்களுக்கு இணைந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. இந்தியாவின் ஊடுருவல்களுக்கு பதிலடி கொடுக்க எல்லையில் நடப்பது என்ன என்பது குறித்து பல தகவல்களை சீனா செய்தி வெளியிட்டு வந்துள்ளதாக குளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி அப்பட்டமாக கூறியுள்ளது.

    English summary
    Five Indians who went missing are India's intelligence personnel, says Global Times. India is encroaching China's territory, it said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X