மாடு முட்டி உடையும் ரயில்..மனுசன் ஆட்டுனா விழும் பாலம்! இதுதான் குஜராத் மாடலா? விளாசும் நெட்டிசன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் விபத்துக்குள்ளானதில் ஏராளமானோர் பலியான நிலையில் பாலத்தை புணரமைத்து நான்கு நாட்கள் கூட ஆகாத நிலையில் மனிதன் ஆட்டினால் விழும் பாலமும், மாடு முட்டி உடையும் ரயிலும் தான் குஜராத் மாடலா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரில் பாயும் மச்சூ நதியின் குறுக்கே சுமார் 233 மீட்டர் நீளமும் நான்கரை அடி அகலமும் கொண்ட கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டு இருந்தது.

சுமார் 140 ஆண்டுகளுக்கு முன் மரம் கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த இந்தப் பாலமானது கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புனரமைக்கப்பட்டது.

கேபில் பாலம் விபத்து

கேபில் பாலம் விபத்து

சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சுற்றுலாத்தலமான அந்த பாலத்தில் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டதாக கூறப்படுகிறது. மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக பாலம் உடைந்து ஆற்றுக்குள் விழுந்தது அங்கு நின்றிருந்த பொதுமக்கள் அனைவரும் ஆற்றில் தத்தளித்தனர்.

அரசின் அஜாக்கிரதை?

அரசின் அஜாக்கிரதை?

அவர்களில் சுமார் 130க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் 170 பேர் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மேற்கு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் பாலம் உடைந்து விழுந்த பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. உருபுறம் விபத்துக்கு காரணம் நாங்கள் இல்லை என மாநில அரசு விளக்கம் அளித்துள்ள நிலையில் மறுபுறம் புனரமைப்பு மேற்கொண்ட சில நாட்களில் விபத்து ஏற்பட்டது எப்படி என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்து வருகிறது.

வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில்

குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் மட்டுமல்லாது அடிக்கடி விபத்தில் சிக்கி சேதமாகும் வந்தே பாரத் ரயிலும், நெட்டிசன்களின் கேலிக்குள்ளாகி வருகிறது. குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இயக்கப்பட்ட முதல் நாளே ரயில் மீது எருமை மாடு மோதியது. அதற்கடுத்த இரண்டாவது நாள் பசு மாடு மோதியது.

குஜராத் மாடலா?

குஜராத் மாடலா?

இதில் வந்தே பாரத் ரயிலின் முன் பகுதி சேதமான நிலையில் இணையதளங்களில் கடும் கிண்டல் கேலிக்கு உள்ளானது. எருமை மாடு மோதுவதை கூட இந்த ரயிலால் தாங்க முடியாத என பலரும் விமர்சித்த நிலையில் ரயிலின் முன்பாகம் சரி செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது அதே குஜராத் மாநிலத்தில் பாலம் விபத்து மக்களை பலி கொண்டுள்ள நிலையில் மனிதன் ஆட்டினால் விழும் பாலமும், மாடு முட்டி உடையும் ரயிலும் தான் குஜராத் மாடலா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+