டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குட்நியூஸ்.. மார்ச் 11ம் தேதி Endemic- ஆக மாறும் Pandemic? ஐசிஎம்ஆர் வல்லுனர் தரும் நம்பிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் வருகின்ற மார்ச் 11ம் தேதி கொரோனா வைரஸ் பேண்டமிக் என்னும் பெருந்தொற்று எண்டமிக் நிலையை அடையும் வாய்ப்பு உள்ளதாக ஐசிஎம்ஆர் தொற்றுநோயியல் பிரிவு தலைவர் சமீரான் பாண்டா தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஒரு நோய் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட இன குழு, அல்லது நிலப்பரப்பில் மட்டும் பரவினால் அது epidemic அதாவது தொற்று நோய் என்று அழைக்கப்படும். பின்னர் அது பரவும் வேகம் வைத்து அதனை வரையறுப்பார்கள். ஒரு epidemic பல நாடுகளில் ஏற்பட்டால் அதை "பேண்டமிக் - pandemic - பெருந்தொற்று"

தமிழகத்தில் கொரோனா தீவிரம் - ஐசியூ நோயாளிகள், ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு தமிழகத்தில் கொரோனா தீவிரம் - ஐசியூ நோயாளிகள், ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிப்பு

இந்த நிலையில் எண்டமிக் தொற்று என்பது உலகம் முழுக்க ஒரு நோய் தாக்குதல் ஏற்பட்டு, பின் அதை அழிக்கவே முடியாமல் போய், அது மனித வாழ்க்கையோடு ஒரு அங்கமானால் அது எண்டமிக் தொற்றாக மாறும். அதாவது மனித குளத்தோடு எப்போதும் இருக்கும் ஒரு சராசரி காய்ச்சல், சீசன் ப்ளூ காய்ச்சல் போல மாறிவிடும்.

எண்டமிக்

எண்டமிக்

அதாவது இந்த எண்டமிக் நோய் அழிக்கப்படாமல் எப்போதும் மக்களோடு இருக்கும். அவ்வப்போது குறிப்பிட்டு இடைவெளியில் அந்த நோய் மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட சில நாடுகளில் தோன்றி மறையும். இதுதான் எண்டமிக் தொற்று. ஆனால் இப்படிப்பட்ட எண்டமிக் பெரிய அளவில் மரணத்தை ஏற்படுத்தாது. ஒரு குளிர்கால காய்ச்சல் போல வந்து வந்து செல்லும். ஃப்ளு, மலேரியா, காலரா, எச்1என்1, எபோலா என்று பல நோய் தாக்குதல்கள் எண்டமிக் தொற்று தாக்குதல்கள் ஆகும்.

எண்டமிக் கொரோனா

எண்டமிக் கொரோனா


வருடம் முழுக்க ஃப்ளு, மலேரியா, காலரா, எச்1என்1, எபோலா போன்ற எண்டமிக் ஆங்காங்கே ஏற்பட்டாலும் உலகம் முழுக்க இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. திடீரென ஒரு நாட்டில் கேஸ்கள் வரும், சில நாட்கள் மக்களை தாக்கிவிட்டு, பின் மறைத்துவிட்டு, பின் மீண்டும் வரும். இதுதான் எண்டமிக். இந்த நிலையில் கொரோனா இப்படி எண்டமிக் போல மாற்றம் அடைய வாய்ப்பு உள்ளதாக ஐசிஎம்ஆர் தொற்றுநோயியல் பிரிவு தலைவர் சமீரான் பாண்டா தெரிவித்துள்ளார்.

 இந்தியா ஓமிக்ரான்

இந்தியா ஓமிக்ரான்

அவர் அளித்துள்ள பேட்டியில், நாம் நம்முடைய பாதுகாப்பை குறைத்தால் அதனால் புதிய கொரோனா வகைகள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளன. இப்போது ஓமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. ஓமிக்ரான் ஒருவேளை டெல்டாவை முந்தி இந்தியாவில் ஆதிக்கம் மிக்க வைசாக் மாறினால் கொரோனா எண்டமிக் போல மாற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளன.

மார்ச் 11ம் தேதி

மார்ச் 11ம் தேதி

ஒருவேளை இப்படி நடந்தால் மார்ச் 11ம் தேதி கொரோனா எண்டமிக் என்ற நிலையை அடையாளம். புதிதாக கொரோனா வகை எதுவும் தோன்றாமல் இருந்தால் இப்போது இருக்கும் ஓமிக்ரான் பரவல் கொரோனா பெருந்தொற்றை எண்டமிக் என்ற நிலைக்கு மாற்றும் வாய்ப்பு உள்ளது. எங்கள் கணக்குப்படி ஓமிக்ரான் அலை டிசம்பர் 11ம் தேதி தொடங்கியது. சரியாக 3 மாதம் இந்த பரவல் ஏற்படும். அதன்படி மார்ச் 11ம் தேதி இந்த பரவல் முடிந்து கொரோனா எண்டமிக் ஆகலாம். புதிய வகை கொரோனா எதுவும் உருவாகாமல் இருக்க வேண்டும்.

 ஐசிஎம்ஆர்

ஐசிஎம்ஆர்

இன்னும் இரண்டு வாரம் காத்திருந்தால் டெல்லி, மும்பையில் கொரோனா கேஸ்கள் உச்சம் தொட்டுவிடும். மோசமான நிலையை கடந்துவிட்டோமா என்று சில நாட்களில் சொல்ல முடியும்.இப்போது மும்பை, டெல்லியில் குறையும் கேஸ்களை வைத்து எதுவும் சொல்ல முடியாது. கொரோனா சோதனைகளை தொடர்ந்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு இது தொடர்பான கோரிக்கை வைத்து இருக்கிறோம் என்று ஐசிஎம்ஆர் தொற்றுநோயியல் பிரிவு தலைவர் சமீரான் பாண்டா தெரிவித்துள்ளார்.

English summary
If Omicron beats Delta, Coronavirus may become endemic by March 11 says ICMR Top scientist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X