• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1 ஜிபி டேட்டா ரூ300 என்ற நிலை போயே போச்சு- 1 ஜிபி ரூ10தான்..பிரதமர் மோடி பெருமிதம்!

Google Oneindia Tamil News

டெல்லி: 1 ஜிபி டேட்டா ரூ300 என்ற நிலையில் இருந்து 1ஜிபி டேட்டா ரூ10 என்ற நிலைக்கு இந்தியா மாறி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். ஆறாவது இந்தியா மொபைல் காங்கிரசையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த ஐஎம்சி கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்று நடைபெறும் மாநாடு உலகளாவியதாக இருக்கலாம் ஆனால் அதன் விளைவுகள் மற்றும் திசைகள் உள்ளுரில் உள்ளன என்றார். 21ம் நூற்றாண்டில் வேகமாக வளரும் இந்தியாவுக்கு இன்று சிறப்பான நாள் என்றார். "இன்று, 130 கோடி இந்தியர்கள் நாட்டிலிருந்தும் நாட்டின் தொலைத்தொடர்புத் துறையிலிருந்தும் 5ஜி வடிவில் அற்புதமான பரிசைப் பெறுகிறார்கள். 5ஜி என்பது நாட்டில் ஒரு புதிய சகாப்தத்தின் கதவுகளைத் தட்டுகிறது. "5ஜி என்பது எல்லையற்ற வாய்ப்புகளின் தொடக்கமாகும். இதற்காக ஒவ்வொரு இந்தியரையும் வாழ்த்துகிறேன்" என்று அவர் மேலும் கூறினார். இந்த 5ஜி அறிமுகம் மற்றும் தொழில்நுட்பத்தின் அணிவகுப்பில், கிராமப்புறங்கள் மற்றும் தொழிலாளர்கள் சம பங்காளிகள் என்று அவர் திருப்தியுடன் குறிப்பிட்டார்.

5ஜி அறிமுகம் பற்றிய மேலும் ஒரு செய்தியை வலியுறுத்திய பிரதமர், "புதிய இந்தியா வெறும் தொழில்நுட்பத்தின் நுகர்வோராக இருக்காது, ஆனால் அந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும் செயல்படுத்துவதிலும் இந்தியா தீவிரப் பங்கு வகிக்கும். எதிர்கால வயர்லெஸ் தொழில்நுட்பத்தை வடிவமைப்பதிலும், அது தொடர்பான உற்பத்தியிலும் இந்தியா பெரும் பங்கு வகிக்கும் என்றார். 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களுக்காக இந்தியா மற்ற நாடுகளைச் சார்ந்து இருந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஆனால் 5ஜி மூலம் இந்தியா புதிய சரித்திரம் படைத்துள்ளது. "5ஜி மூலம், இந்தியா முதல் முறையாக தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் உலகளாவிய தரத்தைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

உத்தர பிரதேசத்தை உலுக்கிய விபத்து: பலியான 27 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்! உத்தர பிரதேசத்தை உலுக்கிய விபத்து: பலியான 27 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

 அந்த 4 தூண்கள்..

அந்த 4 தூண்கள்..

டிஜிட்டல் இந்தியா பற்றிப் பேசிய பிரதமர், இது வெறும் அரசின் திட்டம் என்று சிலர் நினைக்கிறார்கள் என்றார். "ஆனால் டிஜிட்டல் இந்தியா என்பது வெறும் பெயரல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு பெரிய தொலைநோக்கு. மக்களுக்காக வேலை செய்யும், மக்களுடன் இணைந்து செயல்படும் அந்த தொழில்நுட்பத்தை சாமானிய மக்களிடம் கொண்டு செல்வதே இந்த தொலைநோக்குப் பார்வையின் குறிக்கோள். டிஜிட்டல் இந்தியாவுக்கான முழுமையான அணுகுமுறையின் அவசியத்தில் கவனம் செலுத்திய பிரதமர், "நாங்கள் ஒரே நேரத்தில் நான்கு திசைகளில் 4 தூண்களில் கவனம் செலுத்தினோம். முதலாவதாக, சாதனத்தின் விலை, இரண்டாவது, டிஜிட்டல் இணைப்பு, மூன்றாவது, தரவு செலவு, நான்காவது, மற்றும் மிக முக்கியமாக, 'டிஜிட்டல் ஃபர்ஸ்ட்' யோசனை . முதல் தூண் குறித்து பிரதமர் கூறுகையில், குறைந்த விலையில் சாதனங்களை தற்சார்பு மூலம் மட்டுமே அடைய முடியும். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் இரண்டு மொபைல் தயாரிப்பு அலகுகள் மட்டுமே இருந்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். "இந்த எண்ணிக்கை இப்போது 200 ஆக உயர்ந்துள்ளது" என்று மோடி கூறினார். 2014-ல் மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யாத நாம், இன்று ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள மொபைல் போன் ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளோம் என்று பிரதமர் அடிக்கோடிட்டுக் கூறினார். "இயற்கையாகவே, இந்த முயற்சிகள் அனைத்தும் சாதனத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இப்போது நாம் குறைந்த விலையில் அதிக அம்சங்களைப் பெறத் தொடங்கியுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார். டிஜிட்டல் இணைப்பின் இரண்டாவது தூணில், 2014ல் 6 கோடியாக இருந்த இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 80 கோடியாக அதிகரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். 2014ல் 100க்கும் குறைவான பஞ்சாயத்துகளில் இருந்து இப்போது 1.7 லட்சம் பஞ்சாயத்துகள் ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. "அரசு வீடு வீடாகச் சென்று மின்சாரம் வழங்கும் பிரச்சாரத்தை ஆரம்பித்தது போல, வீடு தோறும் குடிநீர் இயக்கம் மூலம் அனைவருக்கும் சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணியாற்றியது, உஜ்வாலா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்கியது போல அனைவருக்கும் இணையம் என்ற இலக்கில் எங்கள் அரசாங்கம் இதேபோன்ற முறையில் செயல்படுகிறது," என்று அவர் கூறினார்.

டிஜிட்டல் பர்ஸ்ட்

டிஜிட்டல் பர்ஸ்ட்

மூன்றாவது தூண், தரவுகளின் விலை குறித்தது. தொழில்துறைக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், 4ஜி போன்ற தொழில்நுட்பங்கள் கொள்கை ஆதரவைப் பெற்றதாகவும் பிரதமர் கூறினார். இது தரவுகளின் விலையைக் குறைத்தது. மேலும் நாட்டில் தரவுப் புரட்சி ஏற்பட்டது. இந்த மூன்று தூண்களும் தங்கள் இருப்பை எல்லா இடங்களிலும் காட்ட ஆரம்பித்தன, என்றார். நான்காவது தூண், அதாவது 'டிஜிட்டல் ஃபர்ஸ்ட்' என்ற ஐடியா. ஒரு சில உயரடுக்கு வகுப்பினர், ஏழைகள் டிஜிட்டலின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வார்களா என்று கேள்வி எழுப்பிய நேரத்தை நினைவு கூர்ந்த பிரதமர், அவர்களின் திறனைப் பற்றி சந்தேகம் இருப்பதாக கூறினார். நாட்டின் சாமானியரின் புரிதல், ஞானம் மற்றும் விசாரிக்கும் திறன் மனதில் எப்போதும் நம்பிக்கை இருந்ததைக்காட்டியது. நாட்டின் ஏழைகள் எப்போதும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை துறையில் அரசின் முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எளிதாக்கியது அரசுதான் என்று குறிப்பிட்டார். "அரசாங்கமே பயன்பாட்டின் மூலம் குடிமக்களை மையமாகக் கொண்ட விநியோக சேவையை மேம்படுத்தியது. அது விவசாயிகளாக இருந்தாலும் சரி, சிறு கடைக்காரர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் அன்றாட தேவைகளை இந்த செயலி மூலம் பூர்த்தி செய்வதற்கான வழியை நாங்கள் வழங்கியுள்ளோம்" என்று திரு மோடி மேலும் கூறினார். பல நாடுகள் இந்தச் சேவைகளைத் தொடர்வது கடினமாக இருந்தபோது, பெருந்தொற்றின்போது, டிபிடி, கல்வி, தடுப்பூசி, சுகாதார சேவைகள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது ஆகியவற்றின் தடையற்ற தொடர்ச்சியை அவர் விவரித்தார்.

 யுபிஐ பரிவர்த்தனை

யுபிஐ பரிவர்த்தனை

டிஜிட்டல் இந்தியா ஒரு தளத்தை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், சிறு வணிகர்கள், சிறு தொழில்முனைவோர், உள்ளூர் கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் இப்போது அனைத்தையும் சந்தைப்படுத்த முடியும் என்றார். "இன்று நீங்கள் உள்ளூர் சந்தை அல்லது காய்கறி சந்தைக்குச் சென்று பாருங்கள், ஒரு சிறிய தெருவோர வியாபாரி கூட, பணமாக அல்ல, ஆனால் 'யுபிஐ' மூலம் பரிவர்த்தனை செய்யச் சொல்வார். "ஒரு வசதி கிடைக்கும்போது, சிந்தனையும் தைரியமாகிறது என்பதை இது காட்டுகிறது " என்று பிரதமர் மேலும் கூறினார். அரசாங்கம் தூய்மையான நோக்கத்துடன் செயல்படும் போது, குடிமக்களின் எண்ணங்களும் மாறுகின்றன என்றார் பிரதமர். "2ஜி மற்றும் 5ஜியின் நோக்கத்தில் முக்கிய வேறுபாடு இதுதான்" என்று அவர் குறிப்பிட்டார்.

1ஜிபி டேட்டா ரூ10

1ஜிபி டேட்டா ரூ10

தரவுகளின் விலை உலகிலேயே மிகக் குறைவு என்று பிரதமர் கூறினார். ஒரு ஜிபிக்கு 300 ரூபாயில் இருந்து சுமார் 10 ரூபாயாக குறைந்துள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் தரவுகளின் விலை மிகவும் குறைவாகவே உள்ளது என்று கூறினார். பிரதமர் குறுக்கிட்டு, "நாங்கள் பெரிய விளம்பரங்களை வெளியிடவில்லை என்பது வேறு விஷயம். நாட்டு மக்களின் வசதி மற்றும் வாழ்க்கை வசதி எவ்வாறு அதிகரித்தது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். "முதல் மூன்று தொழில் புரட்சிகளால் இந்தியா பயனடையாமல் இருக்கலாம், ஆனால் 4வது தொழிற்புரட்சியின் முழுப் பலனையும் இந்தியா பெறும் என்றும், உண்மையில் அதை வழிநடத்தும் என்றும் நான் நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

5ஜியால் புரட்சி ஏற்படும்

5ஜியால் புரட்சி ஏற்படும்

5ஜி தொழில்நுட்பத்தின் பயன்பாடு வேகமான இணைய அணுகலுடன் மட்டும் நின்றுவிடாது. அது வாழ்க்கையை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். தொழில்நுட்பத்தின் வாக்குறுதிகளை நம் வாழ்நாளில் நிறைவேற்றுவதைக் காண்போம் என்றார் அவர். நாட்டின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டவிழ்த்துவிடுமாறு தொலைத்தொடர்புத் துறை சங்கத்தின் தலைவர்களை மோடி வலியுறுத்தினார். எலக்ட்ரானிக் உற்பத்திக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்க எம்எஸ்எம்இ-களுக்கு உதவும் சூழலை உருவாக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்த 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

English summary
Prime Minsiter Narendra Modi said that the cost of data is among the lowest in the world. It has come down from 300 rupees per GB to about 10 rupees per GB.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X