டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே மாதம்.. இந்தியாவில் பெருமளவு குறைந்த ஆக்டிவ் கேஸ்கள்.. ஆனால் தமிழகம், அசாம் நிலை மோசம்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 38% வரை குறைந்துள்ள அதே நேரத்தில், தமிழகம், அசாம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் வைரஸ் ஆக்டிவ் கேஸ்கள் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த மே 1ஆம் தேதி 32.68 லட்சமாக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், தற்போது 20.26 ஆகக் குறைந்துள்ளது. அதாவது ஒரே மாதத்தில் ஆக்டிவ் கேஸ்கள் 38% குறைந்துள்ளது.

India’s Active Covid Cases Drop by Over 38% Since May 1 But Tamil Nadu, Assam, Odisha See Sharp Jump

அதேபோல தினசரி கொரோனா பாதிப்பு ஒரே மாதத்தில் 4.01 லட்சத்தில் இருந்து 62% குறைந்து, 1.52 லட்சமாக தற்போது உள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 85% வரை குறைந்துள்ளது.

மகாராஷ்டிராவிலும் ஆக்டிவ் கேஸ்கள் 58% வரை குறைந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் 6.64 லட்சமாக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் தற்போது 2.74 லட்சமாகக் குறைந்துள்ளது. கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஆக்டிவ் கேஸ்கள் குறைந்துள்ளது.

அதேநேரம் தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்கள் 1.15 லட்சத்தில் இருந்து, 165% அதிகரித்து, தற்போது 3.05 லட்சமாக உள்ளது. தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 28 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது.

சாந்தினியா? யாருன்னு எனக்கு தெரியாது.. மறுத்த மாஜி அமைச்சர்.. 5 பிரிவில் பாய்ந்தது வழக்கு சாந்தினியா? யாருன்னு எனக்கு தெரியாது.. மறுத்த மாஜி அமைச்சர்.. 5 பிரிவில் பாய்ந்தது வழக்கு

அதேபோல அசாம் மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்கள் 113.7% உயர்ந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் 25173ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் தற்போது 53 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் மார்ச்-ஏப்ரல் காலகட்டத்தில் தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒடிசா, ஆந்திர மாநிலங்களிலும் ஆக்டிவ் கேஸ்கள் அதிகரித்துள்ளது. ஒடிசாவில் 48.06%, ஆந்திராவில் 34.81% ஆக்டிவ் கேஸ்கள் உயர்ந்துள்ளன.

English summary
India Coronavirus latest update
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X