டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உடனே போரை நிறுத்துங்கள்.. எந்த பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தையே தீர்வு.. புதினிடம் மோடி வலியுறுத்தல்

ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவை எச்சரித்து வந்த நிலையில், உக்ரைன் தலைநகருக்குள் ரஷ்ய படைகள் நுழைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Recommended Video

    Russia - Ukraine Crisis : Chernobyl அணு உலையை கைப்பற்றிய ரஷ்ய படைகள் ?

    ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி தந்து வருகின்றனர்.. இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என்று நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர்.

    செர்னோபில் அணு ஆலையைக் கைப்பற்றிய ரஷ்யா.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபர குற்றச்சாட்டு! அடுத்து என்னசெர்னோபில் அணு ஆலையைக் கைப்பற்றிய ரஷ்யா.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபர குற்றச்சாட்டு! அடுத்து என்ன

     உலக தலைவர்கள்

    உலக தலைவர்கள்

    எனவே, இந்த போரை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இந்திய பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேச வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்... அதாவது, "பிரதமர் மோடி சொன்னால் ரஷ்ய அதிபர் புதின் கேட்பார்... எத்தனை உலக தலைவர்கள் சொல்வதை புதின் கேட்கக்கூடும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், மோடி மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது.. அவரது குரல் மதிப்பு மிக்கது" என்று தெரிவித்திருந்தார்.

    கோரிக்கை

    கோரிக்கை

    எனவே, ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவலும் வெளியானது.. அப்போது, உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த புதினிடம், பிரதமர் மோடி கோரிக்கை விடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

     செய்திக்குறிப்பு

    செய்திக்குறிப்பு

    இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் உள்ளதாவது: "நேட்டோ - ரஷியா இடையிலான பிரச்சனைக்கு அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடாக உள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.. இந்தியா ரஷியா உயர் அதிகாரிகள் மட்டத்தில் போர் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

    முக்கியத்துவம்

    முக்கியத்துவம்

    மேலும் உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்கள், குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் இந்தியாவின் கவலைகள் குறித்தும் ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி உணர்த்தியதுடன், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் இந்தியாவுக்கு திரும்புவதற்கும் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உக்ரைன் -ரஷ்யா இடையேயான போரில் நடுநிலைமை வகிப்பதாக இந்தியா தெரிவித்திருந்துள்ள நிலையில், இப்போரை உடனடியாக நிறுத்தும்படி ரஷிய அதிபரை, பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளது சர்வதேச அரங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    English summary
    Modi talks to Putin, calls for immediate ceasefire and dialogue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X