விமானத்தில் இருப்பது யாரென்றே தெரியாமல் பயணம் செய்த தம்பதி.. நடுவானில் நடந்த சர்பிரைஸ் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகன் பைலட்டாக பணியாற்றும் விமானத்தில் அவரது பெற்றோர் பயணம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

    விமானத்தில் இருப்பது யாரென்றே தெரியாமல் பயணம் செய்த தம்பதி.. நடுவானில் நடந்த சர்பிரைஸ் சம்பவம்

    குழந்தை முதலே சீராட்டி வளர்க்கும் தாய், தந்தைக்கு தனது மகனோ அல்லது மகளோ நல்லதொரு நிலையை அடைந்து அவர்களுக்கு பெருமையை தேடித் தந்தால் அதை விட மகிழ்ச்சி அந்த பெற்றோருக்கு வேறு எதுவும் இல்லை.

    இதற்காக டாக்டராகவோ, கலெக்டராகவோ , விஞ்ஞானியாகவோ மாறித்தான் தங்கள் பெற்றோரை பெருமையடையச் செய்ய வேண்டும் என்றில்லை. நல்ல மனிதம் இருந்தாலே போதும்.

    அன்பு

    அன்பு

    நல்ல மனிதநேயத்துடன் பிறரிடம் அன்பு செலுத்தி, யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் பிறருக்கு ஆபத்து வரும் நேரத்தில் அவர்களை காப்பாற்றுவது, உதவி தேவைப்படும் நேரத்தில் உதவி செய்வது என இருந்தாலே போதுமானதுதான். இந்த நிலையில் வானில் ஒரு அற்புதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ஜெய்ப்பூர்

    ஜெய்ப்பூர்

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு செல்ல வயதான தம்பதி ஒரு விமானத்தில் ஏறினர். அப்போது அங்கு பயணிகளை விமானி, துணை விமானி உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது அங்கிருந்த விமானி ஒருவர் வரவேற்றதால் அந்த தம்பதி சற்று அதிர்ச்சியாகினர். பார்க்க நம் மகன் போல் இருக்கிறாரே என கருதினர்.

    சுதாரித்த பெற்றோர்

    சுதாரித்த பெற்றோர்

    ஒரு நிமிடம் சுதாரித்து பார்த்த போதுதான் அவர் நம் மகன் கமல்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனது தாய் தந்தையரை உடனிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்திய கமல்குமார், அவர்களை விமானியின் அறைக்கும் அழைத்து சென்று விமான இயக்கங்களை காட்டினார்.

    விமானத்தில் மகன்

    விமானத்தில் மகன்

    நாம் பயணம் செய்யும் விமானத்தில் தங்கள் மகன் இருப்பார் என்பதை சற்று தெரியாத அந்த தாய் தந்தை விமானத்தில் பயணம் செய்தது நெகிழ்ச்சியான சம்பவமாக மாறியது. இது குறித்து வீடியோவை அவரது மகன் கமல்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இன்ப அதிர்ச்சி

    இன்ப அதிர்ச்சி

    அதில் நான் எப்போது விமானத்தை இயக்கத் தொடங்கினேனோ அப்போதிலிருந்தே இந்த சம்பவத்திற்குத்தான் காத்திருந்தேன். இறுதியாக என் சொந்த ஊரான ஜெய்ப்பூர் செல்லும் போது இந்த வாய்ப்பை நான் பெற்றோர். இது உணர்வுப்பூர்வமானது என பதிவிட்டுள்ளார். ஒரு பைலட்டாக கமல்குமாரின் கனவு நனவாகிவிட்டது. இந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+