டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேட்டரி சூடாகி தீப்பிடித்து ஆபத்தை விளைவிக்கும்... இந்திய விமானங்களில் ஆப்பிள் லேப்டாப்புக்கு தடை

Google Oneindia Tamil News

டெல்லி: பேட்டரி சூடாகி தீப்பிடிக்கும் ஆபத்து உள்ள காரணத்தால் 15 இன்ச் மேக்புக் புரொ லேப்டாப் மாடல்களை விமானத்தில் கொண்டு செல்ல வேண்டாம் என இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம், செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 வரை 15 இன்ச் மேக்புக் புரொ லேப்டாப்களை விற்பனை செய்தது.

அப்படி விற்பனை செய்த லேப்டாப்களின் பேட்டரிகள், அதிகமாக வெப்பமடைந்து தீப்பற்ற வாய்ப்பு இருப்பதை கண்டுபிடித்து இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கடந்த ஜூன் 20ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

டிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு டிரம்ப் எடுத்த 2 அதிரடி முடிவுகள்.. இந்தியா மட்டுமல்ல உலகமே இப்போது சிக்கலில் சிக்கி இருக்கு

சர்வீஸ் சென்டருக்கு போங்க

சர்வீஸ் சென்டருக்கு போங்க

இதன் காரணமாக லேப்டாப்பை சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுவந்து பேட்டரியை டெஸ்ட் செய்துகொள்ளுமாறு ஆப்பிள் அறிவித்தது. மேலும் லேப்டாப்பின் சீரியல் நம்பரை வைத்துப் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்.

‘பிரச்சனை மற்றவற்றில் இல்லை

‘பிரச்சனை மற்றவற்றில் இல்லை

குறிப்பிட்ட தேதிக்குள் உருவாக்கப்பட்ட இந்தக் குறிப்பிட்ட மாடலைத் தவிர மற்ற லேப்டாப்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை எனறும் அப்போது கூறியிருந்தது.

இணையதள முகவரி அறிவிப்பு

இணையதள முகவரி அறிவிப்பு

மேலும் https://support.apple.com/15-inch-macbook-pro-battery-recall என்ற இணையதள முகவரியில் லேப்டாப்பின் சீரியல் எண்ணை செக் செய்து, பாதிக்கப்பட்டிருந்தால் உங்கள் பேட்டரியை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்' என ஆப்பிள் அறிவித்தது.

விமான ஆணையம் அறிவிப்பு

விமான ஆணையம் அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பினை அடிப்படையாக கொண்டு இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் டுவிட்டரில், " சில குறிப்பிட்ட 15 இன்ச் மேக்புக் புரொ லேப்டாப் மாடல்களில் பேட்டரி சூடாகி ஆபத்தை விளைவிக்கும் ஆபத்து இருப்பதால் அதனை ஆப்பிள் நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

15 இன்ச் மேக்புக் புரொ

இதனால், 15 இன்ச் மேக்புக் புரொ லேப்டாப்களை பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்தும் வரை பயணிகள் யாரும் அதை விமானத்தில் கொண்டுசெல்ல வேண்டாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

English summary
15 inch macbook pro apple model laptop ban in indian flights
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X