டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைப்போம்... சொல்லி அடித்த பிரதமர் மோடி!!

லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தேர்தல் பிரச்சாரங்களின்போது பிரதமர் மோடி கூறியிருந்தது உண்மையாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி:லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகி இருக்கிறது.

பிரதமர் மோடியை பொது எதிரியாக கூறி வேலை செய்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மண்ணை கவ்வியுள்ளன. இந்த நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்று பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியிருந்தது இன்று நிரூபணமாகி இருக்கிறது.

Prime Minister Modis Prediction Comes True

தேர்தல் பிரச்சார் கூட்டங்களில் பேசும்போது பிரதமர் மோடி, பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறினார். அத்துடன், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 50 இடங்கள் கூட இந்த தேர்தலில் கிடைக்காது என்று கூறியிருந்தார்.

அது அப்படியே இன்று நடக்கிறது. இதேபோன்று, மத்திய உள்துறை ராஜ்நாத் சிங்கும் அண்மையில் இதே கருத்தை கூறி இருந்தார். பாஜக மூன்றில் இரு பங்கு தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மை பெறும் என்று கூறி இருந்தார். அதாவது, கடைசிக் கட்ட தேர்தல்களுக்கு முன்பே இந்த கருத்தை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கூறி இருந்தனர்.

ஆட்சியமைக்க உரிமை கோரி வரும் 26ஆம் தேதி ஜனாதிபதியை சந்திக்கிறார் மோடி! அன்றே பிரதமராக பதவியேற்பு? ஆட்சியமைக்க உரிமை கோரி வரும் 26ஆம் தேதி ஜனாதிபதியை சந்திக்கிறார் மோடி! அன்றே பிரதமராக பதவியேற்பு?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 300 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படியே, இப்போது தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன.

இந்த நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மை பெறாவிட்டால், அமைச்சரவையில் இடம் கேட்டு அழுத்தம் கொடுத்து கேட்கலாம் என்று காத்திருந்த கூட்டணி கட்சிகளின் கனவு தேர்தல் முடிவுகளால் கானல் நீராகிவிட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சிகள் கூட 2014ம் ஆண்டு போன்று அதிக இடங்கள் கிடைக்கும் என்று நம்பவில்லை.

English summary
Prime Minister Modi's prediction comes true On Lok Sabha election results today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X