Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி பழனிசாமி மீதான ரூ4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு- ஆக.2-க்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டியின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீதான ரூ4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் 2-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு: விரைவில் விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

    திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.எஸ்.பாரதி 2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை தமிழக முதல்வராகப் பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.

    நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள்

    நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள்

    ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் 4 வழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்தது. அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டு முதல்வரின் உறவினர் ராமலிங்கத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் 4 வழிச் சாலையை விரிவுபடுத்தி பலப்படுத்த ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்துக்கும் ரூ200 கோடி மதிப்பிலான மதுரை ரிங் ரோடு பணி ஒப்பந்தம் சேகர் ரெட்டி பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

    முறைகேடுகள்

    முறைகேடுகள்

    வண்டலூர் - வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்ற ரூ.200 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் எஸ்பிகே அண்ட் கோ என்ற நிறுவனத்துக்கும் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் நெடுஞ்சாலைத் துறைகோட்டங்களின் கீழ் வரும் சாலைகளில் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ4,800 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் பி.சுப்பிரமணியம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டிருக்கிறது என கூறியிருந்தார்.

    நிலுவையில் எடப்பாடி வழக்கு

    நிலுவையில் எடப்பாடி வழக்கு

    ஆர்.எஸ்.பாரதியின் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் இடைக்கால தடை விதித்தது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இவ்வழக்கு இப்போதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

     ஆக.2-க்கு ஒத்திவைப்பு

    ஆக.2-க்கு ஒத்திவைப்பு

    இந்நிலையில் ரூ4,800 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு தொடர்பான இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்; இவ்வழக்கு விசாரிக்கப்படாமல் இருப்பதால் விசாரணைகளும் முடங்கி உள்ளதாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமணா பெஞ்ச் முன்பு ஆஜராகி இதனை சுட்டிக்காட்டினர். இதனையடுத்து இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் முன்பாக எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு இன்று 15-வது வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 2-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+