டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ! 16வது அமைச்சரவையை கலைத்து தீர்மானம்?

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெற்றுள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 3 லட்சத்து 85ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Union Cabinet meeting held tomorrow evening headed by prime minister Modi

வேலூர் தவிர்த்து நாடு முழுவதும் 542 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 340 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதைத்தொடர்ந்து வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார்.

அன்றைய தினமே மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நாளை மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணி வெற்றி பெற காரணம் என்ன? வாஜ்பாய் முன்னாள் உதவியாளர் சொல்லும் முக்கியமான 'பாயிண்ட்'பாஜக கூட்டணி வெற்றி பெற காரணம் என்ன? வாஜ்பாய் முன்னாள் உதவியாளர் சொல்லும் முக்கியமான 'பாயிண்ட்'

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 16வது அமைச்சரவையை கலைத்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.

English summary
The Union Cabinet meeting held tomorrow evening headed by prime minister Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X