Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற மீட்டிங்! விவாதித்த முக்கியமான விஷயம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் குழு, புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து இரண்டு கூட்டம் நடத்தி விவாதித்ததாகவும், இந்த கூட்டம் புதன்கிழமை (நேற்று) முடிந்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அகில் பாரதிய மாணவர் பரிஷத் (ஏபிவிபி) இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தது. ஆர்எஸ்எஸ் அதன் பொதுப் பொதுச் செயலாளர்கள் கிருஷ்ண கோபால் மற்றும் அருண்குமார், அதன் விளம்பரப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேகர் மற்றும் பலர் பிரதிநிதிகளாக பங்கேற்றனர்.

அவர்களைத் தவிர, வித்யா பாரதி, பாரத சிக்ஷா சம்ஸ்கிருதி உதான் நியாஸ், பாரத சிக்ஷா மண்டல் மற்றும் ஏபிவிபி உள்ளிட்ட

ஆர்எஸ்எஸ் கல்வியாளர்கள்

ஆர்எஸ்எஸ் கல்வியாளர்கள்

பாஜக சார்பில் ஒருங்கிணைப்பாளர் வி சதீஷ், பொதுச் செயலாளர் சிடி ரவி மற்றும் இணை பொதுச் செயலாளர் (அமைப்பு) சிவபிரகாஷ் ஆகியோர் பிரதிநிதிகளாக பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாணவர்கள் கண்ணோட்டத்தில் புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. மேலும் பல்வேறு ஆர்எஸ்எஸ்-சார்ந்த கல்வியாளர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

யுபிஎஸ்சி தேர்வுகள்

யுபிஎஸ்சி தேர்வுகள்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மற்றும் மத்திய அமைச்சர்களான ராஜீவ் சந்திரசேகர் மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். திறன் மேம்பாடு மற்றும் யுபிஎஸ்சி தேர்வுகள் பற்றிய கலந்துரையாடலும் இக்கூட்டத்தில் நடைபெற்றது.

மழலையர் கல்வி

மழலையர் கல்வி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை என்றால் என்ன என்பதை இப்போது பார்ப்போம்: பள்ளிக்கல்வியின் அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்தல் மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதை, தேசிய கல்விக் கொள்கை 2020 வலியுறுத்துகிறது.

புதிய முறை

புதிய முறை

முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வியை வலியுறுத்தும் வகையில், தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும். துவரை பள்ளிக்கு வராத 3 - 6 வயது வரையிலானவர்கள் பள்ளிப் பாடம் படிப்பதற்கு இந்த புதிய முறை உதவும். குழந்தைகளின் மனநிலைக்கேற்ற ஆசிரியர்களை உருவாக்க, இந்த காலகட்டம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டதாக உள்ளது. புதிய கல்வி முறை, 3 ஆண்டு அங்கன்வாடி / மழலையர் கல்வியுடன், 12 ஆண்டு பள்ளிக்கூடப் படிப்பைக் கொண்டதாக இருக்கும்.

உயர்கல்வி

உயர்கல்வி

குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும் , ஆனால் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும் , தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி , பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கொள்கை வலியுறுத்துகிறது. மும்மொழித் திட்டம் உள்பட அனைத்து மட்டத்திலான பள்ளி மற்றும் உயர்கல்வியில் சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்பமாக இருக்கும் வகையில் வழங்கப்படுகிறது. 3,5,8-ஆம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் , உரிய ஆணையம் நடத்தும் பள்ளித் தேர்வுகளை எழுதுவார்கள். 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் தொடரும்.

கல்வி ஆணையம்

கல்வி ஆணையம்

புதிய கல்வி கொள்கை 2020 , கல்வி தொடர்பான விஷயங்கள் மற்றும் கொள்கை வகுத்தல், முறைப்படுத்துதல், இயக்குதல் ஆகியவற்றுக்கு தெளிவான, தனி நடைமுறைகளைக் கொண்டுள்ளது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள், சுதந்திரமான மாநில கல்வித் தர ஆணையத்தை (SSSA) அமைத்துக் கொள்ளும். நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல் ஆகியவற்றுடன், விரிவான அடிப்படையிலான , பன்முக, முழுமையான இளநிலைப் பட்ட ப் படிப்பை கல்விக் கொள்கை முன்னெடுக்கிறது. இளநிலை பட்டக் கல்வி , பன்னோக்கு வாய்ப்புகளுடன் 3 அல்லது 4 ஆண்டு கால படிப்பாக இருக்கலாம். இந்தக் காலத்திற்குள் பொருத்தமான சான்றிதழ் பெற வேண்டும். உதாரணமாக, ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ், 2 ஆண்டுக்குப் பின்னர் மேம்பட்ட டிப்ளமோ , 3 ஆண்டுக்குப் பின்னர் இளநிலைப் பட்டம், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ் வழங்கப்படும்.பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கல்வி மதிப்பெண்களை டிஜிட்டல் முறையில் சேகரித்து வைக்க , அகாடமிக் கிரெடிட் வங்கி உருவாக்கப்படும். இது கடைசியாக பட்டம் வழங்கப்படும் போது சேர்ப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

ஆசிரியர்

ஆசிரியர்

மருத்துவ மற்றும் சட்டப் படிப்புகளைத் தவிர ஒட்டுமொத்த உயர் கல்விக்கும் ஒரே முதன்மை அமைப்பாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் . தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவுடன் ஆலோசித்து புதிய மற்றும் விரிவான தேசிய ஆசிரியர் கல்வித் திட்டக் கட்டமைப்பு, 2021, தேசிய கல்வி மற்றும் பயிற்சிக் குழுவால் வடிவமைக்கப்படும். 2030-க்குள் கற்பித்தலுக்கான குறைந்தபட்ச பட்டத் தகுதி நான்கு வருட பி எட் பட்டமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+