Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சீனாவின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம்” - டோக்லாம் கட்டமைப்புகள் குறித்து இந்தியா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா சீனா இடையே சமீப நாட்களாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் தற்போது பூடான் எல்லை பகுதியான டோக்லாம்-இல் சீனா புதிய கிராமங்களை உருவாக்கியுள்ளதாக சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் காட்டியிருந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த பகுதியில் சீனா உருவாக்கி வரும் புதிய கட்டமைப்புகளை இந்திய உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

கடந்த 2017ல் இந்த டோக்லாம் பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை சுமார் 70 நாட்களுக்கும் மேலாக நீடித்தது. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள செயற்கைக்கோள் படங்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த படங்களை மேக்ஸர் எனும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் நேற்று வெளியிட்டிருந்தது.

டோக்லாம்

டோக்லாம்

டோக்லாம் பகுதி பூடானின் எல்லையில் அமைந்துள்ளது. இது இந்திய-சீனா எல்லைப்பகுதியாகும். இந்த பகுதியில் கிழக்கிலிருந்து 9 கி.மீ தொலைவில் புதிய கிராமம் ஒன்றை சீனா கட்டமைத்துள்ளது. இதற்கு 'பாங்டா' எனும் பெயரையும் சூட்டியுள்ளது. இந்த கிராமத்தில் மக்கள் தொகை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் புதிய கிராமங்களை உருவாக்கவும் சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

 புதிய கிராமம்

புதிய கிராமம்

சீனாவின் திட்டப்படி தற்போது 2வது கிராமத்தின் கட்டமைப்புகள் முடிவுற உள்ளதாகவும், மேலும் 3வது கிராமத்தை உருவாக்க முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கிராமங்கள் மட்டுமல்லாது அதன் அருகில் உள்ள 'அமோ சூ' ஆற்றில் பாலத்தை கட்டவும் சீனா திட்டமிட்டுள்ளது. ஒருவேளை பாலம் கட்டிவிட்டால் சீனாவின் படைகள் எளிதில் இங்கு வந்துவிடும். இதனால் இரு நாட்டு எல்லையிலும் புதிய பதற்றம் உருவாகும். இந்த தேவையற்ற பதற்றம் உருவாவதை இரு நாடுகளும் பேசி முன்னரே தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 புதிய பாலம்

புதிய பாலம்

இவ்வாறு சீனா பாலம் கட்டிவிட்டால் டோக்லாம் பகுதிக்கு சீன படைகள் எளிதில் வந்துவிடும் என்பதை கடந்து, இது சிலிகுரி பகுதியை எளிதாக கண்காணிக்க முடியும் என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிலிகுரி என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஒன்றிணைக்கும் ஒரு பகுதியாகும். இதிலிருந்து இந்த பாலம் கட்டுவதன் நோக்கம் என்னவென்று நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

"ஜம்பேரி மலைமுகடு மற்றும் டோக்லாம் மீது சீனர்கள் தங்கள் சட்டப்பூர்வமான உரிமையை நிலைநாட்ட முயற்சிப்பதற்கு பங்டா கிராமமும் அதன் வடக்கு மற்றும் தெற்கே உள்ள கிராமங்களும் சிறந்த எடுத்துக்காட்டுகள்" என இந்தியாவின் கிழக்கு ராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பிரவீன் பக்ஷி கூறியுள்ளார்.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

இந்நிலையில், "இந்தியாவின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் சீனாவின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது" என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளனர். இந்நிலையில் எல்லையில் சீனாவின் புதிய கட்டுமான பிரச்னையை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்கள் என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+