டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவும், காங்கிரஸும் சேர்ந்து மண்ணை கவ்விய மிசோரம்!

மிசோரத்தில் காங்கிரஸ், பாஜக தோல்விக்கு காரணம் என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: மிசோரத்தில் எதிர்பார்த்தபடியே பாஜகவும், காங்கிரசும் மண்ணை கவ்வி உள்ளது.

லால் தன்வாலா தலைமையில்தான் இங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் லால் தன்வாலாதான் இங்கு முதல்வராக இருக்கிறார்.

இவர் ஐந்து முறை முதல்வராகி ஒரு சாதனையே படைத்தவர். காங்கிரஸ் இப்படி வலுவாக இருந்து வந்தது என்றால் பாஜக சொல்லி கொள்ளும்படி அங்கு கிடையாது.

மத்திய பாஜக

மத்திய பாஜக

மத்திய ஆட்சியில் எந்தவித புதிய அணுகுமுறையையும் அந்த மாநிலத்துக்கென்று பிரத்யேகமாக பாஜக நடைமுறைப்படுத்தவில்லை.

பகிரங்க குற்றச்சாட்டு

பகிரங்க குற்றச்சாட்டு

புதிதாக எதுவும் செய்யவில்லை என்றாலும்கூட பரவாயில்லை, அந்த மாநிலத்தின் கலாச்சாரம், வரலாறு, மொழி, பாரம்பரியத்தை ஆர்எஸ்எஸ் அழிக்க முயற்சித்து வருவதாக பகிரங்கமாகவே குற்றம்சாட்டப்பட்டதுதான் பாஜகவின் அடிப்படையே ஆட்டம் கண்டிருக்க முக்கிய காரணம்.

படுதோல்வி

படுதோல்வி

இதெல்லாம் போதாதென்று, கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரனை, மிசோரம் மாநில ஆளுநராக நியமித்து மோடி அரசு இன்னும் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டது. இதனால் பாஜகவின் படு தோல்வி அங்கு ஏற்கனவே எழுதப்பட்டதுதான்.

மிசோ தேசிய கட்சி

மிசோ தேசிய கட்சி

ஆனால் வலுவான காங்கிரஸ் கட்சியே தற்போது வாக்கு சதவீதத்தை இழந்து ஆட்சியையும் பறி கொடுத்துள்ளது. அதற்கு காரணம், மிசோ தேசிய முன்னணி கட்சிதான். மிசோ தேசிய கூட்டணி, காங்கிரஸின் பாரம்பரிய வாக்குகளை அபகரித்து விட்டது. அதை பறித்ததால் வந்த விளைவே இன்று காங்கிரஸ் ஆட்சியைப் பறி கொடுத்துள்ளது.

மதம் - முக்கிய காரணம்

மதம் - முக்கிய காரணம்

மிசோரம், கிறிஸ்தவ மக்கள் நிறைந்த மாநிலம். மிசோராமில் மதமும் முக்கிய பங்கு வகிக்கிறது. 87 சதவீதம் இங்கு கிறிஸ்தவர்கள்தான். எனவே மதம் சார்ந்து வாக்குகள் பிரிந்தது கூட மெகா கட்சிகளின் தோல்விக்கு ஒரு காரணத்தை தந்து திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆட்சி பறிபோகிறது

ஆட்சி பறிபோகிறது

வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்த ஒரே மாநிலம் மிசோரம்தான். தற்போது அங்கும் அது ஆட்சியைப் பறி கொடுத்துள்ளது ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் முக்கியமானதாக அமைந்துளளது.

English summary
Five State Elections Counting Today. Why BJP and Congress Loss in Mizoram election? What are the reasons?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X