Election Special: பாஜகவின் ரகசிய 16 லிஸ்ட் இது: அதிமுக கோட்டையில் டெல்லி வலை.. எடப்பாடிக்கு செக்?
தர்மபுரி: தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, பாஜக இந்த முறை தனது தேர்தல் வியூகத்தை மிகவும் வித்தியாசமான முறையில் வகுத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்துடன் பின்னிப்பிணைந்த 16 முக்கிய தொகுதிகளை குறிவைத்து பாஜக காய்நகர்த்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது....!!
பாஜகவின் இந்த "கோவில் நகர வியூகம்" என்பது வெறும் தற்செயலானது கிடையாது.. நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம், சிதம்பரம் போன்ற புகழ்பெற்ற கோவில் நகரங்களை உள்ளடக்கிய தொகுதிகளில் இந்துத்துவ அரசியல் சித்தாந்தம் மிக எளிதாக மக்களை சென்றடையும் என்பது அக்கட்சியின் கணக்காக உள்ளது.

இந்த நகரங்களில் உள்ள ஆன்மீகப் பின்புலமும், அங்குள்ள மக்களின் கலாச்சாரப் பிணைப்பும் தங்களுக்குச் சாதகமான வாக்கு வங்கியை உருவாக்கி தரும் என்று பாஜக மேலிடம் நிஜமாகவே நம்புகிறது. இதற்காக டெல்லி தலைமை நேரடியாக தலையிட்டு, தமிழக பாஜகவினருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
பாஜகவின் 16 ரகசிய இடங்கள்
பாஜக குறிவைத்துள்ள அந்த 16 முக்கியத் தொகுதிகள் என்னென்ன தெரியுமா? தமிழகத்தின் ஆன்மீக அடையாளங்கள் அனைத்தும் அந்த 16 தொகுதிகளில்தான் அடங்கியுள்ளன.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் காமாட்சி அம்மன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் போன்றவை இதில் முக்கியமானவை.
கும்பகோணம், தஞ்சாவூர் பெரிய கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், நெல்லையப்பர் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் கோயம்புத்தூர் தெற்கு ஆகிய தொகுதிகளும் இந்த லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளன.
இருந்தாலும், பாஜகவின் இந்த அதிரடி திட்டம் அதிமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தக் கோவில் நகரங்கள் பலவும் அதிமுகவின் கோட்டைகளாகத் திகழ்கின்றன.
கோவில் தொகுதிகள்
உதாரணமாக, ஸ்ரீரங்கம் தொகுதியை எடுத்து கொண்டால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும்.. எனவே அதிமுகவில் அங்கே ஒரு சென்டிமென்ட் மதிப்பு உண்டு. அதேபோல், சிதம்பரம் தொகுதியில் அதிமுக கடந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில், தங்களின் பாரம்பரியமான வெற்றி தொகுதிகளை பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க அதிமுக தலைமை தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது..
சிதம்பரம் போன்ற தொகுதிகளில் தற்போதுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் மீது மக்கள் மத்தியில் சில அதிருப்திகள் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் பாஜக, "வெற்றி வாய்ப்பு" என்ற பெயரில் டெல்லி மேலிடம் மூலமாக அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறதாம்..
20 சதவீத வாக்குகள்
குறிப்பாக, தமிழகத்தில் 20 சதவீத வாக்குகளை பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி பாஜக நகர்வதால், இத்தகைய முக்கிய தொகுதிகளை கைப்பற்றுவது அவர்களுக்கு அவசியமாகிறது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், பாஜகவின் இந்த ஆன்மீக அரசியல் தமிழகத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீகத்தையும் அரசியலையும் இணைப்பதன் மூலம் திராவிடக் கட்சிகளின் கோட்டையில் ஓட்டை போட முடியுமா என்ற முயற்சியிலும் பாஜக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது..
தர்மபுரி லிஸ்ட்டில்
16 முக்கிய கோவில் நகரங்களை பாஜக குறிவைத்துள்ள நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மபுரியும் ஆன்மீக ரீதியாகப் புறக்கணிக்க முடியாத ஒரு பூமியாகவே திகழ்கிறது. பாஜகவின் 20 சதவீத வாக்கு வங்கி இலக்கை எட்ட வேண்டுமானால், விவசாயம் செழிக்கும் தர்மபுரியில் உள்ள இத்தகைய வலிமையான ஆன்மீக வாக்குகளைத் தங்கள் பக்கம் திருப்புவது அக்கட்சிக்கு அவசியமான ஒன்று என்றும் பாஜக நினைக்கிறதாம்.
அதனால்தான், தங்கள் வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள அதிமுகவும் கடுமையாகப போராடி வருகிறது. வரும் நாட்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் போது, இந்த கோவில் நகரங்கள் யாருக்கு ஒதுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்!












Click it and Unblock the Notifications