அடிச்சு சொல்றேன்.. விஜய் கருப்பு பணம் வாங்கறது உண்மை.. புட்டு புட்டு வைத்த திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக, ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக வும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. அதிமுக மற்றும் தவெக இடையே வாக்குவாதம் தீவிரமடைந்து வருகிறது. தவெக தலைவர் விஜய் கருப்புப் பணம் வாங்குவது உண்மை தான். நான் வைத்த குற்றச்சாட்டு குறித்து செங்கோட்டையன் ஏன் வாய் திறக்கவில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமைச்சர் ஐ. பெரியசாமி மீது எவ்வளவு வழக்குகள் உள்ளன. அவர் முதுகை பார்க்காமல், அடுத்தவர்களை குற்றம் சாட்ட அவருக்கு வெட்கமே இல்லை, துரைமுருகன், நேரு, வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 10 அமைச்சர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

விஜய், செங்கோட்டையன் மீது விமர்சனம்
அவர்கள் மீது எந்த நேரமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெரியசாமியின் பேச்சு வேடிக்கையாக உள்ளது. செங்கோட்டையன் ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவர். இதுகுறித்து நான் ஏற்கனவே பலமுறை கேள்வி எழுப்பியிருக்கிறேன். அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. செங்கோட்டையன் கருப்பு பணம் வைத்துள்ளார். அவர் எங்கிருந்து சென்றுள்ளார். நான் கேட்ட கேள்விகளுக்கு விஜய், அண்ணன் செங்கோட்டையன் இருவரும் பதில் அளிக்கவில்லை.
வாய் திறக்கவில்லை
வாய் இருக்கிறது என்பதற்காக திண்டுக்கல் சீனிவாசன் பேசுகிறார் என்று சொல்கிறார்கள். வாய் இருக்கிறது என்பதற்காக அவர் என்ன செய்கிறாரோ அதைத்தான் நான் செய்கிறேன். வாய் இருக்கிறது என்பதற்காக மட்டும் பேசவில்லை. என்னுடைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அந்த ஊழல் வழக்கு தொடர்பாகவோ, சிறை சென்றது குறித்தோ செங்கோட்டையன் வாய் திறக்கவில்லை.
கருப்புப் பணம் வாங்குவது உண்மை
விஜய் கருப்புப் பணம் வாங்குவது உண்மை. நான் சொல்வது உண்மை. இதை நான் எத்தனை முறை சொல்வது. பொது மக்கள், திமுகவினர், அமைச்சர்கள் இதை பேசுகிறார்கள். நான் நேர்மையானவன், ஊழல்வாதி அல்ல, வெள்ளப் பணம் வாங்குகிறேன், என் சம்பளம் இவ்வளவுதான் என்று அவர் பதில் கூறினால் தானே தெரியும்" என்றார்.
-
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு












Click it and Unblock the Notifications