பாஜகவில் இணைகிறாரா நடிகர் ஜூனியர் என்டிஆர்? திடீரென அமித் ஷாவுடன் சந்திப்பு ஏன்? பின்னணி
ஹைதராபாத்: நடிகர் ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தெலுங்கானாவில் முனுகோட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பரப்புரைக்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஹைதராபாத்தில் ஜூனியர் என்டிஆர் சந்தித்து பேசியுள்ளார்.

பின்னர் இருவரும் இணைந்து இரவு உணவு அருந்தினர். சுமார் 20 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மத்திய அமைச்சர் அமித் ஷா, நடிகர் ஜூனியர் என்டிஆரை தெலுங்கு சினிமாவின் ரத்தினம் என்று பாராட்டியுள்ளார்.
முன்னதாக ராமோஜி பிலிம் சிட்டிக்கு சென்ற அமித்ஷா, அதன் நிறுவனர் ராமோஜி ராவை சந்தித்தார். இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அமித் ஷா, பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. ஏற்கனவே பாஜக செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, ஆபரேசன் தென் இந்தியா என்ற புதிய திட்டத்தை அமித் ஷா முன்வைத்தார்.

இதனால் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்க கட்சியினர் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை நியமன எம்பி-க்கள் பதவிகளில் இந்த 4 மாநிலங்களைச் சேர்ந்த திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
அதேபோல் தெலங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு பாஜகவின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் பணியாற்ற தனித்தனிக் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக பாஜக செயலாற்றி வருகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நடிகர் ஜூனியர் என்டிஆரை சந்தித்து பேசியுள்ளது தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நடிகர் ஜூனியர் என்டிஆர் விரைவில் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் நடிகர் பவன் கல்யாண் தனியாக கட்சி தொடங்கி பணியாற்றினாலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் ஜூனியர் என்டிஆரை பாஜக முக்கியத் தலைவர் சந்தித்துள்ளார். இதனால் விரைவில் நடிகர் ஜூனியர் என்டிஆர் பாஜகவில் இணையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications