For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கானா: பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து- 11 பேர் பலியான சோகம்

தெலுங்கானா மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் பலியாகிவிட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் , வாராங்கலில் பட்டாசு தொழிற்சாலையில்
ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் பலியாகிவிட்ட சோகம் நடைபெற்றது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாராங்கல்லில் உள்ள காசிபக்காவில் ஸ்ரீ பத்ரகாளி பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 21 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு பட்டாசுக்கான மூலப்பொருட்களை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

11 persons died in fireworks factory explosion in Telangana

வழக்கம் போல் புதன்கிழமையும் அந்த பணி நடைபெற்றது. அப்போது திடீரென பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி சப்தம் கேட்டு தீவிபத்து ஏற்பட்டது. இதை கேட்டு ஊர்மக்கள் சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு ஆங்காங்கே உடல்கள் சிதறி கிடந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்தனர். இதில் 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் இன்னும் எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்து இனிதான் தெரியவரும்.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக உள்ளன.

English summary
At least 10 persons were charred to death when incendiary material caught fire and exploded on Wednesday at a fireworks factory in Warangal, Telangana.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X