அட பாவமே.. சோகத்தை பாருங்க.. அசாமில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு!
கவுகாத்தி: அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் பர்ஹாம்பூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பமுனி வனப்பகுதியில் 18 காட்டு யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.கால்நடைத்துறை அதிகாரிகளும் விரைந்தனர்.

மலைகள் நிறைந்த வனப்பகுதி என்பதால் மலையடிவாரத்தின் கீழ் நான்கு யானைகளும், மலையின் மேல் பகுதியில் 14 யானைகளும் இறந்து கிடந்தன. யானைகள் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால் மின்னல் தாக்கியதால் இந்த யானைகள் உயிரிழந்துள்ளது என்று வனத்துறை அதிகாரிகள் கூறினார்கள். அசாமில் மின்னல் தாக்கி யானைகள் மொத்தமாக உயிரிழப்பது இதுவே முதல் முறை என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
உயிரிழந்த யானைகளுக்கு நாளை பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன்பிறகே யானைகள் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும். இது தொடர்பாக யானை ஆராய்ச்சி நிபுணர் விஜயானந்த சவுத்ரி கூறுகையில், ' பிரேத பரிசோதனை அறிக்கை யானைகளின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தும். இருப்பினும் மின்னல் தாக்கி யானைகள் இறந்ததாக தெரியவில்லை. யானைகளின் மரணதுக்கு விஷமும் காரணமாக இருக்கலாம்' என்று கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications