12 காட்டுச் சிங்கங்களுக்கு மத்தியில் பிறந்த வனமகன்...குஜராத் கிர் காட்டில் திக் திக் பிரசவம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அகமதாபாத் : 32வயது பெண் ஆம்புலன்சில் சென்று கொண்டிருக்கும் போதே பிரசவ வலி எடுக்க அடர்ந்த காட்டு வழியில் சிங்கங்கள் புடை சூழ ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.

பெண்கள் தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு பிரசவம். மேன்குபென் மக்வானாவிற்கு இது இன்னும் கூடுதல் மறக்க முடியாத சம்பவம், ஏனெனில் அவர் காட்டில் சிங்கங்களுக்கு மத்தியில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

32 வயது நிறைமாத கர்ப்பிணியான மேன்குபென் மக்வானாவிற்கு ஜூன் 29ம் தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அம்ரேலி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தின் அருகே கிர் வனப்பகுதி வழியாக ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது மேன்குபென்னிற்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.

பிரசவ வலி

பிரசவ வலி

நடந்த சம்பவத்தை அம்ரேலி ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகி சேத்தன் கடே திகிலுடன் விவரிக்கிறார். கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மேக்னாவை லான்ஸ்பூர் கிராமத்தில் இருந்து ஜஃபர்பாத் நகரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆம்புலன்சை ஒட்டுனர் ராஜூ ஜாதவ் ஓட்டிச் செல்ல, ஆம்புலன்சில் தொழில்நுட்ப உதவியாளர் அசோக் மேக்னா இருந்துள்ளார். திடீரென மேக்னாவிற்கு பிரசவ வலி அதிகரித்தால் ஆம்புலன்ஸை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் அசோக்.

சிங்கங்கள் படைபெயடுப்பு

சிங்கங்கள் படைபெயடுப்பு

அது அடர்ந்த வனப்பகுதியாக இருந்த போது தைரியமாக வாகனத்தை நிறுத்தி, மகப்பேறு மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் அளித்த தகவலின் படி பிரசவம் பார்த்துள்ளார். இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், மனிதர்கள் இருப்பதை உணர்ந்த 12 சிங்கங்கள் ஆம்புலன்ஸை சுற்றி பரேடு நடத்தியுள்ளன.

சமாளித்த ஊழியர்கள்

சமாளித்த ஊழியர்கள்

ஜாதவ் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பதால் சிங்கம் குறித்து அச்சப்படாமல், அவற்றை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார். இந்த இடைபட்ட நேரத்தில் மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்டு அசோக் மேக்னாவிற்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

வழிவிட்ட விலங்குகள்

வழிவிட்ட விலங்குகள்

இதனையடுத்து ஜாதவ் மெல்ல ஆம்புலன்ஸை நகர்த்த, சிங்கங்கள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அழகாக ஆம்புலன்சிற்கு வழிவிட்டு சென்றுள்ளன. இந்நிலையில் தாயும் சேயும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

வரலாற்று நாயகன்

வரலாற்று நாயகன்

புராணக் கதைகளில் காட்டில் புலி, சிங்கங்களுக்கு மத்தியில் ஐயப்பன் வளர்ந்ததாக படித்திருக்கிறோம், ஆனால் நிஜத்தில் சிங்கங்களின் அணிவகுப்பிற்கு மத்தியில் பிறந்த இந்த குழந்தையும் வரலாற்று நாயகனாகியுள்ளார். அந்த வகையில் மேன்குபென் மேக்னாவிற்கு இது மறக்க முடியாத பிரசவம் தான்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The 32-year-old Manguben Makwana delivered a baby in the vicinity of the Gir forest in an ambulance after midnight surrounded by 12 lions
Please Wait while comments are loading...