For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம் ஆத்மி பெண் அமைச்சரின் கார் மீது திடீர் தாக்குதல்

Google Oneindia Tamil News

AAP minister Rakhi Birla's car attacked in Delhi
டெல்லி: டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசில் பெண்கள், சிறார்கள் மற்றும் சமூக நல அமைச்சராக இருக்கும் பெண் அமைச்சர் ராக்கி பிர்லாவின் கார் மீது நேற்று இரவு தாக்குதல் நடந்துள்ளது.

டெல்லியின் மங்களாபுரி என்ற இடத்தில் நேற்று இத்தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் அமைச்சர் ராக்கி காயமின்றித் தப்பினார்.

இதுகுறித்து ராக்கி கூறுகையில், நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காரைக் குறி வைத்துத் தாக்கினார். முதலில் எதையோ என் கார் மீது அந்த நபர் வீசினார். கார் வேகமாக நகர்ந்து போனதால், உள்ளே படவில்லை. ஆனால் கண்ணாடி உடைந்து விட்டது என்றார்.

26 வயதான ராக்கி, கேஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையிலேயே மிகவும் இளம் வயது கொண்ட அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பத்திரிக்கையாளரான ராக்கி பிர்லா, தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இவரது தாயார் அரசுப் பள்ளியில் ஸ்வீப்பராக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில்தான் ராக்கியும் படித்தார். அன்னா ஹஸாரேவுடன் இணைந்து முதலில் பணியாற்றிய ராக்கி, பின்னர் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

English summary
The vehicle of Women and Child Social Welfare Minister of the Aam Aadmi Party (AAP)-led government in Delhi Rakhi Birla was attacked by an unidentified person at Mongolpuri area on Sunday evening, police said. Birla escaped unhurt. Birla said her car was targetted while she was returning from a ceremony The 26-year-old minister, the youngest in the Cabinet of Chief Minister Arvind Kejriwal, said in her police complaint that she was returning from a ceremony in Mongolpuri's R Block when comebody threw an object at her car, damaging its windscreen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X