For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு! துணைத் தலைவராக எதியூரப்பா- தேசிய செயலராக ஹெச். ராஜா!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எதியூரப்பா உட்பட 11 பேர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய செயலாளர்களில் ஒருவராக ஹெச். ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவின் தலைமை நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

புதிய நிர்வாகிகள் விவரம்:

11 துணைத் தலைவர்கள்

11 துணைத் தலைவர்கள்

மொத்தம் 11 பேர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் உத்தரப்பிரதேச மாநிலத்தவர்.

பண்டாரு தத்தாத்ரேயா (தெலுங்கானா), எதியூரப்பா (கர்நாடகா), சத்யபால் மாலிக் (உ.பி), முக்தர் அப்பாஸ் நக்வி (உ.பி), புருஷோத்தம் ரூபலா( குஜராத்), பிரபாத் ஜா(ம.பி), ரகுவர் தாஸ் (ஜார்க்கண்ட்), கிரண் மகேஸ்வரி (ராஜஸ்தான்), வினய் சஹரூபதே(மகாராஷ்டிரா), ரேணு தேவி (பீகார்), தினேஷ் சர்மா (உ.பி.)

8 பொதுச்செயலாளர்கள்

8 பொதுச்செயலாளர்கள்

மொத்தம் 8 பேர் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜேபி நட்டா (ஹிமாச்சல்), ராஜீவ்பிரதாப் ரூடி (பீகார்), முரளிதர்ராவ் (தெலுங்கானா), ராம்மாதவ் (ஆந்திரா), சரோஜ் பாண்டே (சத்தீஸ்கர்), பூபேந்திர யாதவ் (ராஜஸ்தான்), ராம்சங்கர் கதேரியா (உ.பி), ராம்லால் (டெல்லி). இதில் ராம்லால் அமைப்பு பொதுச்செயலாளராவார்.

4 இணை அமைப்பு பொதுச்செயலாளர்கள்

4 இணை அமைப்பு பொதுச்செயலாளர்கள்

வி. சதீஷ் (கர்நாடகா), செளதான் சிங் (சத்தீஸ்கர்), சிவ்பிரகாஷ் (உ.பி.), பி.எல். சந்தோஷ் (கர்நாடகா) ஆகியோர் இணை அமைப்பு பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயலாளர்கள்..

செயலாளர்கள்..

14 தேசிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 14 பேரில் தமிழகத்தின் ஹெச். ராஜாவும் ஒருவர்.

சியாம் ஜஜூ(மகாராஷ்டிரா), அனில் ஜெயின் (டெல்லி), ஹெச். ராஜா (தமிழகம்), ரொமீன் தேகா (அஸ்ஸாம்), சுதா யாதவ் (ஹரியானா), பூனம் மகாஜன் (மகாராஷ்டிரா), ராம்விசர் நேதம் (சத்தீஸ்கர்), அருண் சிங் (உ.பி), சித்தார்நாத்சிங் (உ.பி), சர்தார் ஆர்.பி.சிங்(டெல்லி), ஸ்ரீகாந்த் சர்மா( உ.பி), ஜோதி துருவே(ம.பி), தருண் செளக்(பஞ்சாப்), ரஜ்னீஷ்குமார்(பீகார்).

10 செய்தி தொடர்பாளர்கள்

10 செய்தி தொடர்பாளர்கள்

ஷானவாஸ் ஹூசேன்(பீகார்), சுதன்சு திரிவேதி (உ.பி), மீனாக்ஷி லேகி (டெல்லி), எம்.ஜே.அக்பர்(டெல்லி), விஜய் சிங்கர் சாஸ்திரி(உ.பி)., லலிதா குமாரமங்கலம் (தமிழ்நாடு), நளின் கோஹ்லி (டெல்லி), சம்பித் பத்ரா( ஒடிஷா), அனில் பலுனி (உத்தர்காண்ட்), நரசிம்மராவ் (ஆந்திரா)

இதர பிரிவுகள்..

இதர பிரிவுகள்..

இதேபோல் மகிளா மோர்ச்சா, யுவ மோர்ச்சா, தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர் மோர்ச்சா, சிறுபான்மை ஆகியவற்றின் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வருண்காந்தி

வருண்காந்தி

பாஜக பொதுச்செயலாளராக இருந்த வருண் காந்தி நீக்கப்பட்டுள்ளார்.

English summary
BJP chief Amit Shah announces his new team of 11 vice presidents, 8 general secretaries and 14 secretaries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X