For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த 10 பாஜக எம்.பி.க்களுக்கு மட்டும் டிக்கெட் கொடுக்காதீங்க: தொல்லையை ஆரம்பித்த எதியூரப்பா

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பாஜகவில் இருந்து விலகி அண்மையில் மீண்டும் கட்சிக்கு திரும்பிய கர்நாடகா முன்னாள் முதல்வர் எதியூரப்பா வந்த வேகத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிட 10 எம்.பி.க்களுக்கு டிக்கெட் கொடுக்கக் கூடாது என்று கூறி தனது கலாட்டாவை ஆரம்பித்துள்ளார்.

பாஜகவில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் அவரிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அண்மையில் மீண்டும் பாஜகவில் சேர்ந்தார்.

yeddyurappa

கட்சியில் சேர்ந்த கையோடு அவர் லோக்சபா தேர்தலில் யார், யாருக்கெல்லாம் சீட் கொடுக்கக் கூடாது என்று ஒரு பட்டியலை கட்சி மேலிடத்தில் அளித்துள்ளாராம்.

அந்த பட்டியலில் 10 எம்.பி.க்களின் பெயர்கள் உள்ளன. அதன் விவரம் வருமாறு,

பி.சி. மோகன்- மத்திய பெங்களூர், டி.பி. சந்திரே கௌடா- பெங்களூர் வடக்கு, ஜனார்தன சாமி- சித்ரதுர்கா, பிரஹலாத் ஜோஷி- தார்வாட், ரமேஷ் ஜிகஜினாகி - பிஜபூர், பி.சி. கட்டிகவுடர் - பகல்கோட், ஷிவரமன கௌடா- கொப்பல், அனந்த்குமார் ஹெக்டே - உத்தர கன்னடா, சுரேஷ் அங்காடி - பெல்காம்.

எம்.பி.க்களை எடுக்காமல் புதியவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்குமாறு எதியூரப்பா கட்சி தலைமையை கேட்டுக் கொண்டுள்ளாராம்.

இதற்கிடையே பெங்களூர் வடக்கு தொகுதியில் எதியூரப்பாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஷோபா கரந்தலஜே போட்டியிட விரும்புகிறார். மேலும் முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவும் இதே தொகுதியில் போட்டியிட ஆசைப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Karnataka CM Yeddyurappa who rejoined BJP recently has reportedly aked the central leadership not to give tickets to 10 sitting MPs from Karnataka in the Lok Sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X