For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கி மோசடி வழக்கில் சிக்கிய ரோட்டோமேக் நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி கைது!

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : வங்கி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரோட்டோமேக் நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரி இருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.

இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ. 800 கோடிக்கு மேல் கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்ததாக விக்ரம் கோத்தாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

CBI arrested Vikram Kothari and his son rahul gothari

இது தொடர்பாக கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரியிடம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக விசாரணை நடைபெற்றது.

இதற்கு முன்னர் கோத்தாரியிடம் கான்பூரில் வைத்தும் விசாரணை நடத்தினர். கடந்த சில தினங்களாக விக்ரம் கோத்தாரியின் கான்பூர் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலையில் டெல்லியில் 48 மணி நேர விசாரணையின் முடிவில் தொழிலதிபர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரியை சிபிஐ கைது செய்துள்ளது.

English summary
Rotomac pen owner Vikram Kothari and his son Rahul were arrested by CBI in connection with the alleged loan default of Rs 3,695 crore to seven nationalised banks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X