For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்ப்பிணிப் பெண்ணிடம் பாலியல் குறும்பு... பத்ரிநாத் கோவில் தலைமை பூசாரி கைது

Google Oneindia Tamil News

டெல்லி: கர்ப்பிணிப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப் பட்டு பத்ரிநாத் கோவிலின் தலைமை பூசாரி கைது செய்யப் பட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பழம்பெருமை வாய்ந்த பத்ரிநாத் கோவிலின் தலைமை பூசாரியான கேசவன் நம்பூதிரி, கடந்த திங்களன்று தனது உதவியாளருடன் டெல்லி மெராலிக்குச் சென்றிருந்தார். அங்கு பத்ரிநாத்தில் ஹோட்டல் வைத்திருக்கும் ஒருவரின் மகளை தனது அறைக்கு அழைத்து தகாத முறையில் நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக, இது குறித்துப் போலீசில் புகார் அளித்துள்ளார் சம்பந்தப்பட்ட 28 வயது கர்ப்பிணிப் பெண். அவரது புகாரில், பூசாரியின் அறையில் சிகரெட் துண்டுகள் சிதறிக்கிடந்ததாகவும், மதுவாடையும் அடித்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணிப் பெண்ணின் புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மது போதையில் இருந்த கேசவன் நம்பூதிரியையும், அவரது உதவியாளரையும் கைது செய்தனர்.

பின்னர், அவர்கள் மீது சட்டவிரோதமாக சிறைவைத்தல் மற்றும் தகாத முறையில் நடந்துகொண்டது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்கள் இருவருக்கும் 14 நாள் சிறைக்காவல் அளித்து தீர்ப்பளித்துள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து பத்ரி-கேதார் கோவில் நிர்வாகம் தலைமை பூசாரி கேசவன் நம்பூதிரியை இடைநீக்கம் செய்து, நயாப் ராவல் விசி ஐஷ்வரா பிரசாத் என்பவரை புதிய தலைமை பூசாரியாக நியமித்துள்ளது.

English summary
The Chief priest of Badrinath temple was arrested Tuesday by Delhi Police for allegedly confining a 30-year-old pregnant woman inside a hotel room in South Delhi’s Mehrauli area and molesting her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X