For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம்

Google Oneindia Tamil News

Combing operations to be stepped up against Maoists in Ker forests: Kerala home minister
திருவனந்தபுரம்: கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் உள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கேரள சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, கேரளாவில் உள்ள கெர் வனப்பகுதியில் இரவு நேரங்களில் மாவோயிஸ்ட்டுகள் நடமாடுவதாக உளவுதுறைக்கு தகவல் வந்துள்ளதாக கூறினார்.

மேலும், இது குறித்து அவர் கூறியதாவது-

உளவுதுறை அளித்துள்ள செய்தி குறிப்பில் கேரள வனபகுதி ஒட்டியுள்ள கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம், காடுகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாடுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாவோயிஸ்ட்டுகளை சமாளிக்க கடுமையான நடவடிக்கைளை எடுக்கப்பட்டு வருகிறது. மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில், கேரள அரசு அனைத்து கட்சிகளிடம் ஆலோசித்து இது பற்றி முடிவு எடுக்கும்.

மாவோயிஸ்ட்டுகள் பழங்குடி மக்களிடம் நெருக்கமான தொடர்புகளை வைத்துகொண்டு குடியேற்றங்கள் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

அதேபோல், மலைப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் சுகாதார வசதிகளை மேமப்டுத்தவும் பழங்குடியினர் வசிக்கும் மக்களின் மனக்குறைகள் போக்கவும் கேரள அரசு பல்வேறு நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது.

மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டத்தால் கேரளாவில் உள்ள அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Patrolling and combing operations would be stepped up in some forests of Kerala where presence of Maoists has been reported by intelligence agencies, state home minister Ramesh Chennithala told the state assembly on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X