கெஞ்சிய மகன்.. காலில் கயிறை கட்டி தலைகீழாக தொங்கவிட்ட கொடூரத் தந்தை.. பரபர சம்பவம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டுப் பாடம் எழுதாமல் இருந்ததால் மகன் காலில் கயிற்றைக் கட்டி தொங்கவிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
தலைகீழாக தொங்கியதால் வலி பொறுக்கமுடியாமல் என்னை கொன்னுவிடுங்கள் என தந்தையிடம் மகன் கெஞ்சிய வீடியோ வைரல் ஆனது. தந்தை மகனை தண்டிப்பதும், மகன் கெஞ்சுவதும் செல்போனில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

படிக்காமல் டிமிக்கி
ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தோர்கரில் வசித்து வரும் ஒரு சிறுவன் பள்ளிப் பாடங்களை முறையாக படிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. பள்ளிக்கு சென்று ஒழுங்காக படிக்கமாலும், வீட்டிலும் பெற்றோர் பேச்சை மதிக்காமலும் டிமிக்கி கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று வீட்டில் இருந்த அந்த மாணவன் வீட்டுப் பாடம் எழுதாமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை ஏன் படிக்கவில்லை எனக் கேட்டுள்ளார்.

சிறுவனுக்கு கொடூர தண்டனை
பிறகு படிப்பதாக மகன் கூற மேலும் கோபம் அடைந்த தந்தை அவனை தண்டிக்க முடிவு செய்தார். இதையடுத்து மகனின் கால்களில் கயிறு போட்டு கட்டினார். பின்னர் அவனை தலைகீழாக தூக்கிலிட்டுள்ளார். அந்த கொடூர மனம் படைத்த தந்தை அதோடு விட்டு விடாமல் ஒரு பிரம்பு எடுத்து வந்து மகனை அடிக்க ஆரம்பித்துள்ளார். இதை பார்த்த தாய் வந்து தடுக்க முயன்றார். ஆனால் தந்தை விடவில்லை.

என்னைக் கொன்றுவிடுங்கள்
வலி தாங்க முடியாமல் சிறுவன் "தயவு செய்து என்னைக் கொன்றுவிடுங்கள். ஆனால் தலைகீழாக தொங்க விடாதீர்கள்" என கதறி அழுதான். இதனால் மனம் உடைந்த அந்த சிறுவனின் தாய் இந்தக் கொடுமைகளை தனது செல்போனில் படம்பிடித்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய தாய் ஜோகானியா மாதா பகுதியில் தன்னுடைய சகோதரன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

சமூக வலைதளத்தில் வைரல்
இதுபோல் பலமுறை கணவர் தன் மகனை தண்டித்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த பிரச்சனை சமூக வலைதளங்களில் செல்லவே தந்தை தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications