உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் யோசனை தெரிவித்துள்ளார்.

கேரளா உயர்நீதிமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

நமது நாடு பல்வேறு மொழிகளைப் பேசுவோரைக் கொண்ட நாடு. இங்கே மனுதாரர் ஆங்கிலம் தெரியாத நபராக இருக்கக் கூடும்.

HC judgments should be translated into local languages, Says President Ramnath Kovind

ஆனால் நமது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்துமே ஆங்கிலத்திலேயே வழங்கப்படுகின்றன. ஆகையால் நீதிபதிகள் அளிக்கின்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் சில மனுதாரருக்கு தெரியாமலேயே போய்விடுகிறது.

இந்த தீர்ப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து மனுதாரர்களிடம் கொடுக்க வேண்டும். அதேபோல் வாய்தா கேட்பதற்கும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும்போதுதான் வழக்குகள் விரைவாக முடிவடையும்.

இவ்வாறு நீதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
President Ram Nath Kovind suggested that the High Court judgments should be translated into local languages.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X