For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சகிப்புத்தன்மை இல்லையா?: ஆமீர் கானை கண்டித்து பாஜக, இந்து சேனாவினர் போராட்டம்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது பற்றி பேசிய பாலிவுட் நடிகர் ஆமீர் கானை கண்டித்து இந்து சேனா அமைப்பினர் அவரது வீட்டிற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்று பிரபலங்கள் தெரிவித்து வருகிறார்கள். அதே காரணத்திற்காக பிரபல எழுத்தாளர்கள், கலைஞர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பிக் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஆமீர் கானும் சகிப்புத்தன்மை குறைந்து வருவது பற்றி பேசியுள்ளார்.

கிரண் ராவ்

கிரண் ராவ்

நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாமை அதிகரித்து வருவதை பார்த்த என் மனைவி கிரண் ராவ் நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா என்று கூறினார் என ஆமீர் கான் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

பாலிவுட்

பாலிவுட்

ஆமீர் கான் எப்படி அவ்வாறு கூறலாம் என்று பாஜகவினர் கொந்தளித்துள்ளனர். ஏன், பாலிவுட்டில் உள்ள சிலர் கூட ஆமீருக்கு எதிராக பேசியுள்ளனர். இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் ஆமீர் கானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்து சேனா

இந்து சேனா

சகிப்புத்தன்மையின்மை பற்றி பேசிய ஆமீர் கானை கண்டித்து இந்து சேனா அமைப்பினர் அவரது வீட்டிற்கு வெளியே போராட்டம் நடத்தினர். காவி கொடியுடன் போராட்டம் நடத்திய அவர்கள் ஆமீருக்கு எதிராக கோஷமிட்டனர்.

பாஜக

ஆமீர் கானை கண்டித்து பாஜகவினர் பீகார் மாநிலம் பாட்னா மற்றும் உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் ஆகிய நகரங்களில் செவ்வாய்க்கிழை போராட்டம் நடத்தினர்.

English summary
Hindu Sena workers protested outside Bollywood actor Aamir Khan's residence on tuesday over intolerance row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X