For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருகிறது இந்தியாவின் முதல் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம்.. சிறப்பம்சம் என்ன?

குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு இந்திய ரயில்வே துறையை பெரும் மகிழ்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

குஜராத்தில் தேர்தல் நடந்து கொண்டு இருந்ததால் அம்மாநிலத்திற்கு நலத்திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி குஜராத்தில் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

India’s dream of first ever Rail University comes true, What is special?

இந்தியாவில் அமைய இருக்கும் முதல் தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் இதுதான். இது ரயில்வே துறையில் இந்தியாவை முன்னேற்றுவதற்கும், இன்னும் நிறைய பணியாளர்களை இதில் சேர்க்கவும் வகை செய்யும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசும்போது ''வதோதராவில் தொடங்கப்படும் இந்த பல்கலைக்கழகம் மோடியின் கனவை நினைவாக்கும். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களுக்கு வலுசேர்க்கும் என்று கூறியுள்ளார். மேலும் பிரதமரின் நேரடி விருப்பத்தின் பேரில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இதற்காக வதோதராவில் ஏற்கனவே இருக்கும் ரயில்வே துறைக்கு சொந்தமான நிலம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த பல்கலைக்கழகம் முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட இருக்கிறது. மேலும் இதற்கான தொகை அனைத்தும் இந்திய ரயில்வே துறையிடம் இருந்து பெறப்படும். இதில் 3000 மாணவர்கள் வரை சேர்க்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

ரயில்வே தொடர்பான சாட்டிலைட் தொழில்நுட்ப படிப்புகளும் இதில் சொல்லித்தரப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

English summary
Central government announced that Gujarat will get National Train and Transport University. Train and Transport University will be constructed in Vadora. It was a major boost for the Indian Railways with the Cabinet approving the setting up of the first National Rail and Transport University (NRTU). The premier institution will be set up in Vadodra, Gujarat and according to the Railway Ministry, the university would skill human resources and the build the capability of the Indian Railways.The ministry also said, " India's 1st National Rail & Transportation University to transform Indian railway and transport sector for a New India." Railway Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X