For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் மோடியைச் சந்தித்தார் ஜெ.... தமிழகத்தின் தேவைகள் குறித்த மனு அளித்தார்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்தின் தேவைகள் குறித்து மனு அளித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

இலங்கை அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடியின் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தார்ஜெயலலிதா. ஆனால், டீசல் விலை யுயர்வைத் திரும்பப் பெற வேண்டும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.

Jayalalitha met modi today

இந்நிலையில், பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்துள்ளார் ஜெயலலிதா. இந்தச் சந்திப்பின் போது காவிரி மேலாண்மை மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது, தமிழக இலங்கை மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

Jayalalitha met modi today

முன்னதாக பிரதமரை மதியம் 1 மணியளவில் ஜெயலலிதா சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இன்று காலை சாலை விபத்தில் பலியான மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த மோடி சென்று விட்டதால் சந்திப்பு தாமதமானது. அதனைத் தொடர்ந்து சுமார் 3.30 மணியளவில் டெல்லி சௌவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ஜெயலலிதா மோடியைச் சந்தித்தார்.

இதற்கிடையே மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜெயலலிதா.

English summary
The Tamilnadu chief minister Jayalalitha met prime minister Narendra Modi at Delhi and gave an memorandum.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X