For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்கில் போருக்குப் பின் கம்பீரமாக எழுந்து நின்ற இந்திய ராணுவம்!

Google Oneindia Tamil News

-ரிச்சா பாஜ்பாய்

கார்கில்: கார்கில் போருக்குப் பின்னர் இந்திய ராணுவம் மேலும் வலுவடைந்துள்ளது. முன்பை விட தற்போது நல்ல வலிமையுடன் காணப்படுகிறது.

இந்தப் போரின்போது நம்மை விட பாகிஸ்தான் தரப்பு நன்கு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டதை நமது ராணுவம் அதிர்ந்து அதிர்ச்சியுற்றது.

ஆனால் சுதாரித்துக் கொண்ட இந்தியா ராணுவம் முன்பை விட தீரமாக பதிலடி கொடுத்ததால் பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது அல்லது பின்னடைவைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், பாகிஸ்தானின் சிறப்பான திட்டமிடல் காரணமாக நாம் பெரிய இழப்பையும் சந்திக்க நேரிட்டது என்பதும் உண்மை.

டிராஸைக் குறி வைத்த பாகிஸ்தான்

டிராஸைக் குறி வைத்த பாகிஸ்தான்

1999 கார்கில் போரின்போது டிராஸ் பகுதியைத்தான் பாகிஸ்தான் முக்கியமாக குறி வைத்துத் தாக்கியது. காரணம், டிராஸ்தான் பெரும் சேதத்தையும் சந்தித்தது. கார்கில் மாவட்டத்தின் ஒரு பகுதிதான் டிராஸ்.

டிராஸைப் பிடிக்க முயற்சி

டிராஸைப் பிடிக்க முயற்சி

டிராஸ் நகரை கைப்பற்ற முன்கூட்டியே திட்டமிட்டிருந்தருக்கிறது பாகிஸ்தான். அதை நமது ராணுவம் உணரவில்லை. இதனால்தான் நமக்கு டிராஸ் பகுதியில் பாகிஸ்தானை விட அதிக இழப்பு ஏற்பட்டு விட்டது.

நல்ல பாடம்

நல்ல பாடம்

உண்மையில் கார்கில் போர் நமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது என்பது உண்மைதான். போருக்குப் பின்னர் நமது ராணுவம் கார்கில் உள்பட எல்லைப் பகுதி முழுவதையும் பலப்படுத்தி விட்டது. முன்பை விட இரும்பு அரண் போல தற்போது பாகிஸ்தானுடனான எல்லைக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் வலிமையாகியுள்ளது.

சக்தி வாய்ந்த நாடு

சக்தி வாய்ந்த நாடு

டிராஸ் பகுதி ராணுவ அதிகாரியான பிரிகேட் கமாண்ட் ஜி.பி.சிங் ஒன்இந்தியாவிடம் இதுகுறித்துக் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா மிகவும் வலிமை வாய்ந்த நாடாக, வலிமை வாய்ந்த ராணுவத்தைக் கொண்ட நாடாக வளர்ந்துள்ளது.

முப்படைகளும் சூப்பர்

முப்படைகளும் சூப்பர்

ராணுவம் மட்டுமல்லாமல், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிலும் இந்தியா தற்போது வலுவாக உள்ளது. இனிமேல் கார்கில் போன்ற நிலை தற்சமயத்திற்கு இந்தியாவுக்கு வராது என்பது உறுதி என்றார்.

பயிற்சி முறை மாறி விட்டது

பயிற்சி முறை மாறி விட்டது

மேலும் அவர் கூறுகையில் கார்கிலில் கிடைத்த பாடத்தைக் கொண்டு நமது ராணுவத்தினருக்கான பயிற்சிகளிலும் பெரும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது மிகவும் சிறப்பான பயிற்சி நமது படையினருக்குத் தரப்படுகிறது. உயர்ந்த தரத்துடன் கூடிய பயிற்சியை நமது வீரர்கள் தற்போது பெறுகிறார்கள்.

எதையும் சந்திக்கத் தயார்

எதையும் சந்திக்கத் தயார்

எத்தகைய சூழலையும் சந்திக்கும் ஆயத்த நிலையில் நமது வீரர்கள் தற்போது உள்ளனர். எனவே கார்கில் போன்ற போர் இனி வராது என்ற தைரியத்துடனும், நம்பிக்கையுடனும், நிம்மதியுடனும் இந்திய மக்கள் இருக்கலாம் என்றார் சிங்.

English summary
Dras is that part of Kargil district, that perhaps witnessed the most devastation during the 1999 Kargil war. India was reportedly unaware that Pakistan had fully planned to capture Dras. It can be said that the Kargil war was a big lesson for the Indian armed forces as they overhauled the overall security arrangements at the border and also strengthened the soldiers, post Kargil war. Dras Brigade Commander Brigade GP Singh told OneIndia, "India has emerged as a very powerful and strong nation in last 15 years."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X