For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க பொது வாக்கெடுப்பு நடத்துங்க.... கேப்பில் 'கெடா வெட்டும்' கேஜ்ரிவால்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரிட்டனில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பைப் போல டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பிரிட்டன் பொதுவாக்கெடுப்பு நடத்தியது. இதில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கேஜ்ரிவால் கோரிக்கை

கேஜ்ரிவால் கோரிக்கை

இதேபோல் யூனியன் பிரதேசமான டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

டெல்லியில் பொதுவாக்கெடுப்பு

இது தொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், பிரிட்டன் பொதுவாக்கெடுப்பையடுத்து டெல்லிக்கும் மாநில அந்தஸ்துக்கான பொதுவாக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு

காங்கிரஸ் எதிர்ப்பு

அரவிந்த் கேஜ்ரிவாலின் இந்த கோரிக்கையை அபாயகரமானது என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசமைப்புச் சட்டம் எந்த ஒரு பொதுவாக்கெடுப்பையும் அனுமதிப்பதில்லை. கேஜ்ரிவால் அபாயகரமான ஒரு பாதையில் செல்கிறார். பிற மாநிலங்களும் இத்தகைய பொதுவாக்கெடுப்பைக் கோரும் நிலைமைகளை அவர் உருவாக்கப்பார்க்கிறார்.

தேசவிரோதமானது

தேசவிரோதமானது

நாட்டில் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் உள்ள நிலையில்கேஜ்ரிவால் வேண்டுமென்றே இந்த விவகாரத்தைக் கிளறுகிறார். கேஜ்ரிவாலின் இந்த நீலைப்பாடு தேச விரோதமானது என்றார்.

English summary
Hours after Britain voted to leave the European Union, Delhi chief minister Arvind Kejriwal called for a referendum on statehood for Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X