For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி.. 4 நாட்களில் முடிவு: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பது குறித்து 4 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

Leader of Opposition issue to be decided in four days’

லோக்சபா தேர்தலில் 44 இடங்களைத்தான் காங்கிரஸ் கட்சியால் பெற முடிந்தது. மொத்தம் உள்ள 543 இடங்களில் 10% இடங்களையாவது ஒரு கட்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் அப்படி பெறாததால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை. அண்மையில் அட்டர்னி ஜெனரலும் கூட காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.

ஆனாலும் எதிர்க்கட்சி அந்தஸ்துக்காக காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அட்டர்னி ஜெனரலின் கடிதம் மற்றும் அனைத்து சட்ட விதிகளையும் பார்த்துவிட்டேன். நான் சட்டபடிதான் செயல்பட முடியும். இது தொடர்பாக 4 நாட்களில் முடிவை அறிவிக்கிறேன் என்றார்.

English summary
Lok Sabha Speaker Sumitra Mahajan Wednesday said she would take a decision on the Leader of Opposition issue within four days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X