சூரிய ஒளி மின்சாரத்தால் உங்கள் வீட்டை பிரகாசமாக்குங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாசு அதிகரித்து வரும் நிலையில், இயற்கை எரிவாயு வளங்கள் குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில் தூய மற்றும் புதுப்பிக்கக் கூடிய சக்தி மிகவும் தேவைப்படுகிறது.

வீட்டு தேவைகளுக்கு சூரிய ஒளி சக்தியை பயன்படுத்துவதை பிரபலப்படுத்திய இந்திய நிறுவனங்களில் ஒன்று வர்சாஸ்வா. உலகில் அதிக சக்தியை பயன்படுத்தும் 4வது நாடு இந்தியா. இந்தியாவில் சக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Light up your house with Solar power

இயற்கை வளங்களை வைத்து நாட்டின் சக்தி தேவையை நிறைவு செய்வது கடினமாக உள்ளது. இந்த இடத்தில் சூரிய ஒளி சக்தி முக்கிய பங்காற்றுகிறது.

சோலார் இபிசி சர்வீசஸ், சோலார் ரூஃப்டாப் சொலுஷன்ஸ், நிறுவப்பட்ட சோலார் பிளான்ட்டுகளை பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்கிறது வர்சாஸ்வா.

Light up your house with Solar power

சூரிய ஒளி சக்தி மற்றும் மின்சார துறையில் நேர்த்தியமாக செயல்படும் நிறுவனங்களில் ஒன்றான வர்சாஸ்வா கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது.

வர்சாஸ்வா குழு ரூஃப்டாப் உள்ளிட்ட பல்வேறு சோலார் ப்ராஜெக்டுகளை நிறுவியுள்ளது. ராஜஸ்தான், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 80 கிலோவாட் முதல் 10 மெகாவாட் வரையிலான பல ப்ராஜெக்டுகளை வெற்றிகரமாக செய்துள்ளது.

Light up your house with Solar power

சூரிய ஒளி சக்தி குறித்து மக்களிடையே விழுப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது வர்சாஸ்வா. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஆண்டின் பல மாதங்கள் வெயில் அடிப்பதால் சூரிய ஒளி சக்திக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

English summary
Considering the increase in pollution and depletion of natural fuel sources, green and sustainable energy has become the need of the hour. Varchasva is one of the first companies in India that has popularized the use of solar energy for domestic uses.