மணிப்பூரில் பாஜக வென்றது இப்படித்தான்.. தனிப்பெரும்பான்மையை பிடிக்க உதவிய காங்கிரஸ்!
இம்பால்: நடந்து முடிந்துள்ள மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தான் இந்த வெற்றியை பாஜகவுக்கு பெற்றுத்தந்திருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 60 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. பாஜக மணிப்பூரில் பதவி ஏற்றதும் நடக்கும் இந்த தேர்தல் வடகிழக்கு மாநிலத்தில் கவனத்தைப் பெற்றது.
பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

மணிப்பூர்
நடந்து முடிந்த மணிப்பூர் தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 31 இடங்களில் பாஜக முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 6 இடத்திலும் எஸ்.பி.பி 9 இடத்திலும் மற்ற மாநில கட்சிகள் 14 இடத்திலும் முன்னிலையில் இருக்கிறது. மணிப்பூரில் ஒற்றை கட்சியாக ஆட்சி நடத்திவந்த காங்கிரஸ் கட்சி தற்போது நான்காவது இடத்தில் இருக்கிறது.

பாஜக
மணிப்பூரில் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தற்போது பாஜக 31 இடத்தில் முன்னிலையில் இருக்கிறது. இதையடுத்து தனிப்பெரும்பான்மையோடு பாஜக மணிப்பூரில் ஆட்சியைத் தக்க வைக்கிறது. கடந்த தேர்தலில் 21 இடங்களில் வென்று, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி உதவியோடு ஆட்சிக்கு வந்தனர்.

பெரும்பான்மை
இந்த முறை பெரும்பான்மை பெற பாஜக கடந்த ஆட்சியில் செய்த விஷயங்களே போதுமானதாக இருக்கிறது. 2017, பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன், மணிப்பூரில் அதிக அளவில் கலவரங்கள் நடந்திருக்கிறது. ஆனால் பாஜக ஆட்சிக்குவந்ததும், அதிக அளவில் கலவரம் குறைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் அமைதி திரும்பியதாகவும், இதனால் மக்கள் நிம்மதியாக இருந்ததாகவும் தெரியவருகிறது. அதோடு மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் நிறைய வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தது.

மோடி
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால், மாநிலத்துக்கு தேவையான வளர்ச்சி கிடைக்கும் என மக்கள் நினைத்து பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள். பிரதமர் மோடி இங்கு டிஜிட்டல் பிரசாரம் செய்தார். மணிப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியும், விளையாட்டுப் பல்கலைக்கழகமும் கொண்டு வரப்படும் என டிஜிட்டல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதோடு கடந்த தேர்தலில் சொல்லிய தேர்தல் வாக்குறுதிகளை பாஜக கொஞ்சம் நிறைவேற்றியுள்ளது.
Recommended Video

காங்கிரஸ்
மணிப்பூரில் வலுவான எதிர்கட்சி இல்லாததும் பாஜகவின் வெற்றிக்கு உதவியாக இருந்தது. மணிப்பூரில் காங்கிரஸ் தலைவர் ஒக்ராம் இபோபி சிங், கடந்த ஐந்து ஆண்டுகள் காணாமல் போய், கடைசி 2 மாதங்களில் பிரசாரத்துக்கு வந்ததாகவும் மணிப்பூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்தமுறை 28 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் இந்தமுறை 6 இடத்தில் மட்டும் தான் முன்னிலையில் இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications