For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லையில் தொல்லை தீரட்டும்.. பிறகு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடலாம்.. அனுபம் கெர்

Google Oneindia Tamil News

ராஞ்சி: இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் அமைதி திரும்பும் வரை, அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை இந்தியா மேற்கொள்ளக் கூடாது என்று நடிகர் அனுபம் கெர் கூறியுள்ளார்.

இந்த விஷயத்தில் இந்தியா கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும், எல்லையில் அமைதியும், இயல்பு நிலையும் திரும்பும் வரை பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்றும் அனுபம் கெர் கூறியுள்ளார்.

இந்திய கேப்டன் மகேந்திர சிங் டோணியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதில் அனுபம் கெர், டோணியின் தந்தை பான் சிங் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங், டோணியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட்டில் நடந்து வருகிறது. இதற்காக ராஞ்சியில் முகாமிட்டுள்ளார் அனுபம் கெர்.

அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்தான் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அவரது பேட்டியிலிருந்து...

என்னைப் பொறுத்தவரை

என்னைப் பொறுத்தவரை

என்னைப் பொறுத்தவரை, எல்லைப் பகுதியில் இந்தியத் தரப்பில் எந்த உயிரும் பறி போகக் கூடாது, யாரையும் பாகிஸ்தான் படையினர் சுட்டு வீழ்த்தக் கூடாது. அமைதி நிலவ வேண்டும். அதுவரை போட்டிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

ஆளாளுக்கு முடிவெடுக்க ஆரம்பித்தால்

ஆளாளுக்கு முடிவெடுக்க ஆரம்பித்தால்

நாம் இன்னொரு வாய்ப்பு தருவோம் என்று அரசு நினைத்தால், மக்களும் அவர்களுக்குரிய சிந்தனைக்குப் போக ஆரம்பிப்பார்கள். எனவே இதுகுறித்து அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.

மக்களுக்கு இரங்குவோம்

மக்களுக்கு இரங்குவோம்

காஷ்மீர் எல்லையில் எத்தனையோ போர் பாகிஸ்தான் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சந்தோஷ் மகதிக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தீவிரவாதிகள் அட்டகாசம் ஓயவில்லை. அங்கு உயிரிழந்தோருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலாவது நாம் கிரிக்கெட் விளையாடாமல் இருக்க வேண்டும்.

இது உணர்வுப்பூர்வமானது

இது உணர்வுப்பூர்வமானது

சில விஷயங்கள், மற்ற எதையும் விட மேலானது. எல்லைப் பகுதியில் நிலவுவது உணர்ச்சிப் பூர்வமான சூழ்நிலை. அது சரியாகும் வரை நாம் கிரிக்கெட் போட்டிகளைத் தள்ளிப் போடலாம். இதில் தவறே இல்லை. நிலைமை சரியானதும், தாராளமாக விளையாடலாம்.

அப்பாவிகள் கொல்லப்படாதபோது

அப்பாவிகள் கொல்லப்படாதபோது

அப்பாவி மக்கள் கொல்லப்படாத நிலை ஏற்படும்போது நாமம் நிச்சயம் விளையாடுவது குறித்து யோசிக்கலாம். இப்போது விளையாடுவது ஒன்றும் அவசரமான விஷயம் இல்லை என்றார் அனுபம் கெர்.

2007 வரை

2007 வரை

2007ம் ஆண்டு முதல் இந்தியா, பாகிஸ்தான் இடையே எந்த டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது. இருப்பினும் 2012ல் பாகிஸ்தான் அணி இந்தியா வந்து ஒரு நாள் போட்டிகளில் ஆடி விட்டுச் சென்றது.

English summary
India should not resume its cricketing ties with Pakistan until the situation at the border becomes "normal", feels veteran actor Anupam Kher. Kher, 60, is in Jharkhand to shoot for an upcoming biopic on Indian captain Mahendra Singh Dhoni. He plays Dhoni's father Pan Singh in the movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X