ஆபரேஷன் கமல்.. அடுத்த குறி எந்த மாநிலம்? முக்கிய தலைக்கு ரவுண்டு கட்டும் பாஜக- அதிர்ர்ச்சியில் காங்!
ஜெய்பூர் : மகாராஷ்டிராவை அடுத்து பாஜகவின் கவனம் ராஜஸ்தான் பக்கம் திரும்பியிருப்பதாகவும், தேர்தல் வரை கூட காத்திருக்காமல் அடுத்த திட்டம் அரங்கேறும் என்றும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக.
அதைத்தொடர்ந்து, பாஜக ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும், 'ஆபரேஷன் கமல்' திட்டத்தைச் செயல்படுத்த பாஜக மேலிடம் வியூகம் வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

பாஜகவிற்கு பலியாகும் காங்கிரஸ்
தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளால் பலவீனமடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, பாஜகவின் அரசியல் சூழ்ச்சிமிக்க திட்டங்களால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி அரசு பாஜகவின் திட்டத்தால் கவிந்துள்ளது. காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு எதிரான வலிமையான எதிர்க்கட்சியாக இருக்க முடியாமல் திணறுகிறது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

வரிசையாக ஆட்சி கவிழ்ப்பு
கடந்த 3 ஆண்டுகளிலேயே 4 மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்த்து தனது கொடியை நாட்டியுள்ளது பாஜக. 2019ஆம் ஆண்டு நடந்த சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 15 இடங்களை சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வென்றன. பா.ஜ.க-வால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. ஆனால், சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 10 எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் வசம் வளைத்து, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது பா.ஜ.க. புதுச்சேரியில் 2021-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முடிவடையும் நேரத்தில் எம்.எல்.ஏக்களை கட்சி தாவ வைத்து நாராயணசாமி அரசைக் கவிழ்த்தது பாஜக.

கர்நாடகா
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 104 இடங்களில் வெற்றிபெற்றது பா.ஜ.க. இருப்பினும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பதவி விலகினார் முதல்வர் எடியூரப்பா. அதன் பிறகு, 78 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. ம.ஜ.த தலைவர் குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், ஆட்சி அமைத்த ஓராண்டிலேயே , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏ-க்களையும் ம.ஜ.த கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து தன் பக்கம் இழுத்து அரசைக் கவிழ்த்தது பா.ஜ.க.

மத்திய பிரதேசம்
2018-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க 109 இடங்களில் வென்றது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 121 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் சார்பில் கமல்நாத் முதல்வரானார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் வசம் இழுத்து ஆட்சியைக் கவிழ்த்தது பாஜக.

காங்கிரஸை குறிவைத்து
தேர்தலில் நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை என்றாலும் கூட காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் குறிவைத்து, அக்கட்சிகளின் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியமைப்பதை தங்கள் ஃபார்முலாவாகவே கையில் எடுத்து அரங்கேற்றி வருகிறது பாஜக. பாஜகவின் இந்த பக்கெட் லிஸ்ட்டில் இன்னும் சில மாநிலங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பெரும் பின்னடைவு
இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் 4 மாநிலங்களில் பின்னடைவைச் சந்தித்தது காங்கிரஸ். 2021ஆம் ஆண்டில் கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மோசமாக தோல்வியடைந்தது. தமிழகத்தில் மட்டுமே திமுக கூட்டணியுடன் குறிப்பிடத்தக்க இடங்களை வென்றது காங்கிரஸ். இப்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் தனித்து ஆட்சியில் இருக்கிறது.

2 மாநிலங்களில்
அடுத்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு கடுமையாகப் போராட வேண்டிய நிலை உள்ளது. இந்த இரண்டு மாநிலங்களையும் இழந்தால் காங்கிரஸ் மீண்டும் தலையெடுப்பது பெரிய சிக்கலாகிவிடும் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சச்சின் பைலட்
ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும் இடையே பெரும் மோதல் போக்கு இருந்து வருகிறது. தன்னை முதல்வர் ஆக்காமல் அசோக் கெலாட்டை முதல்வராக்கிவிட்டார் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வருத்தம் அடைந்து, தன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வெளியேறினார் சச்சின் பைலட். அவர் பாஜகவில் இணையவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் சோனியா காந்தியின் பேச்சுவார்த்தையில் சமாதானமாகி கட்சியில் அமைதியாகிவிட்டார்.

அடுத்த குறி ராஜஸ்தான்
அடுத்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சச்சின் பைலட்டை தங்கள் பக்கம் இழுப்பது அல்லது மகாராஷ்டிராவில் நடத்தியதைப் போல அதிருப்தி எம்.எல்.ஏக்ககளை தங்கள் பக்கம் இழுத்து ராஜஸ்தான் காங்கிரஸை உடைத்து ஆட்சியைக் கவிழ்ப்பது என பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானில் 'ஆபரேஷன் கமல்' வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகவும் கூறி காங்கிரஸை பதற வைக்கிறார்கள் பாஜகவினர்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications