For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பம்- பாஜகவில் இணைகிறாரா மாஜி முதல்வர் அமரீந்தர்சிங்?

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க.) சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அமரீந்தர்சிங் பாஜகவில் இணையமாட்டார் என்று அவரது ஊடக ஆலோசகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடுமையான உட்கட்சி மோதலை எதிர்கொண்டிருக்கிறது.

முதல்வராக இருந்த அமரீந்தர்சிங்குக்கு எதிராக 50 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து முதல்வர் பதவியை அமரீந்தர்சிங் ராஜினாமா செய்தார்.

தோனி இருக்கட்டுமே ப்ளீஸ்.. கங்குலியிடம் 10 நாட்கள் கெஞ்சி வாங்கிய சான்ஸ்.. சீக்ரெட்டை சொன்ன பிரபலம் தோனி இருக்கட்டுமே ப்ளீஸ்.. கங்குலியிடம் 10 நாட்கள் கெஞ்சி வாங்கிய சான்ஸ்.. சீக்ரெட்டை சொன்ன பிரபலம்

அமரீந்தர்சிங் கடும் அதிருப்தி

அமரீந்தர்சிங் கடும் அதிருப்தி

இதனையடுத்து புதிய முதல்வராக சரண்ஜித்சிங் சன்னி பதவியேற்றார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாஜி கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து நியமிக்கப்பட்டது முதலே அமரீந்தர்சிங் கடும் அதிருப்தியில் இருந்தார். அவரது பதவியும் பறிபோனதால் அமரீந்தர்சிங் அடுத்த கட்டமாக என்ன செய்வார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

டெல்லி பயணம்

டெல்லி பயணம்

இந்த நிலையில் அமரீந்தர்சிங் டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது. டெல்லி செல்லும் அமரீந்தர்சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசக் கூடும் என்றும் அமரீந்தர்சிங் பாஜகவில் இணைவார் என்றும் தகவல்கள் ரெக்கை கட்டி பறப்பதால் பஞ்சாப் அரசியல் களம் அனலாக தகிக்கிறது. பஞ்சாப்பில் அகாலிதளத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்தது பாஜக. இப்போது அகாலிதளமும் கூட்டணியில் இல்லை. அதனால் அமரீந்தர்சிங் வருகையை பாஜக ஆவலுடன் எதிர்பார்த்தும் கொண்டிருக்கிறது.

பாஜக குரலில் பேசிய அமரீந்தர்சிங்

பாஜக குரலில் பேசிய அமரீந்தர்சிங்

பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து தற்போது ராஜினாமா செய்திருக்கும் நவ்ஜோத்சிங் சித்து, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்; பாகிஸ்தான் பிரதமர், ராணுவ தளபதியுடன் மிக நெருக்கமான உறவு வைத்திருப்பவர்; அவரை பஞ்சாப் முதல்வராக்கினால் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என பாஜகவின் குரலில் அமரீந்தர்சிங் தெரிவித்த கருத்துகள் இப்போது சுட்டிக்காட்டப்படுகிறது. அதனால்தான் அமரீந்தர்சிங் பாஜகவில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் கூறப்படுகிறது.

அமரீந்தர்சிங் தரப்பு மறுப்பு

அமரீந்தர்சிங் தரப்பு மறுப்பு

ஆனால் அமரீந்தர்சிங் பாஜகவில் இணைவார் என்பதை அவரது ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரால் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக ரவீன் துக்ரால் கூறுகையில், அமரீந்தர்சிங் தனிப்பட்ட பயணமாகத்தான் டெல்லி செல்கிறார். டெல்லியில் அவரது நண்பர்கள் சிலரை சந்திக்க உள்ளார். அமரீந்தர்சிங்கின் டெல்லி பயணத்துக்கு இத்தகைய உள்நோக்கங்கள் கற்பிக்கக் கூடாது. தேவை இல்லாத ஊகங்களை கிளப்பிவிடவும் வேண்டாம் என்றார். என்னதான் அமரீந்தர்சிங் தரப்பு இப்படி விளக்கம் கொடுத்தாலும் அனைவரது பார்வையும் அவரது டெல்லி பயணத்தை நோக்கியதாக இருக்கிறது.

English summary
Punjab Ex CM Capt Amarinder will visit to Delhi and will Join BJP, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X