For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எடைக்கு எடை வெல்லம்.. ஏழுமலையானுக்கு "ஸ்வீட்" கொடுத்த வெள்ளி நாயகி பி.வி. சிந்து #pvsindhu

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தந்த ரியோ ஒலிம்பிக்ஸ் நாயகி, பி.வி.சிந்து தனது எடைக்கு எடை வெல்லம் நேர்த்திக் கடனாக கொடுத்தார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியவர் சிந்து. இறுதிப் போட்டியில் அவர் மயிரிழையில் தங்கத்தை நழுவ விட்டார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு விஜயம் செய்து நேர்த்திக் கடனை செலுத்தினார்.

கோபிசந்த் - பி.வி.சிந்து

கோபிசந்த் - பி.வி.சிந்து

சிந்துவுடன் அவரது குடும்பத்தினர், பயிற்சியாளர் கோபிசந்த் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தனர். அனைவரும் பய பக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

அதிகாலை தரிசனம்

அதிகாலை தரிசனம்

நேற்று இரவே பி.வி.சிந்து உள்ளிட்டோர் திருமலைக்கு வந்துவிட்டனர். இன்று அதிகாலையில் விஐபி பிரேக் தரிசனம் நேரத்தில் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர்.

மொட்டை கோபி

மொட்டை கோபி

பின்னர் கோபிசந்த் தனது நேர்த்திக்கடனாக மொட்டை போட்டுக் கொண்டார். சிந்துவின் வெற்றிக்கு இவர் கொடுத்த தீவிரப் பயிற்சியும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

எடைக்கு எடை வெல்லம்

எடைக்கு எடை வெல்லம்

பி.வி.சிந்து தனது எடைக்கு எடை வெல்லம் கொடுத்தார். அதாவது அவரது எடையான 68 கிலோ அளவுக்கு வெல்லம் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்றால் இங்கு வந்து எடைக்கு எடை வெல்லம் கொடுப்பதாக தான் வேண்டிக் கொண்டிருந்ததாகவும், தற்போது அந்த நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளதாகவும் சிந்து கூறினார்.

English summary
Olympion PV Sindhu visited Tirumala temple today with her parents and coach Gopichand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X