பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் ஃபேஸ்புக், ட்விட்டரில் சேர்ந்த ரயில்வே அமைச்சகம்
டெல்லி: ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் ரயில்வே அமைச்சகம் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கணக்கு துவங்கியுள்ளது.
2014ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா இன்று தாக்கல் செய்கிறார். இந்நிலையில் திங்கட்கிழமை ரயில்வே அமைச்சகம் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கணக்கு துவங்கியுள்ளது.

இது தவிர யூடியூப்பிலும் தகவல்களை வெளியிட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து சதானந்த கவுடா கூறுகையில்,
செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறோம். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன் அது குறித்த தகவல்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வெளியிடப்படும். செவ்வாய்க்கிழமையில் இருந்து அனைத்து தகவல்களையும் சமூக வலைதளங்களில் பெற முடியும் என்றார்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Going to present my maiden budget as a <a href="https://twitter.com/RailMinIndia">@RailMinIndia</a> minister today. Hope we are able to meet public expectations.</p>— Sadananda Gowda (@DVSBJP) <a href="https://twitter.com/DVSBJP/statuses/486367357997039616">July 8, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>@RailMinIndia இது தான் ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் கணக்கு ஆகும். இது தவிர 022-4501555 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் பட்ஜெட் பற்றிய தகவல்களை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பாஜகவோ, காங்கிரஸோ, கம்யூனிஸ்ட் அரசோ எதுவாக இருந்தாலும் ரயில்வே பட்ஜெட் மக்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும் என்றார் கவுடா.