For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜஸ்தானில் குதிரையை தெறிக்கவிட்ட வெய்யில்.. ஏசி காரில் பாய்ந்து விபத்து

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக சாலையில் ஓடிய குதிரை ஒன்று ஏசி காருக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் நகரில் கொளுத்தும் வெய்யிலை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஜெய்ப்பூர் சாலையில் தாறுமாறாக ஓடிய குதிரை, திடீரென காருக்குள் பாய்ந்ததால் பரபரப்பு நிலவியது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரில் நேற்று அதிக அடித்த அளவு வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்தனர். அப்போது, அசன்புரா என்ற இடத்தில் குதிரை வண்டிக்காரர் ஒருவர் தன் குதிரையை அருகில் உள்ள கம்பத்தில் கட்டி விட்டு அதற்கு உணவும் கொடுத்து கொண்டிருந்தார்.

 Rajasthan heat effect, Horse crashes through car’s windshield

ஆனால், வெயில் தாங்க முடியாமல் அந்தக் குதிரை கயிற்றை அறுத்து கொண்டு ரோட்டில் தாறுமாறாக ஓடியது. அப்போது வழியில் வந்த ஒரு பைக் மீது மோதி விட்டு எதிரே வந்த கார் மீது திடீரென பயங்கர வேகத்தில் பாய்ந்தது.

அதில், காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு குதிரை காரின் உள்ளேயே சென்று விட்டது. இதில் காரை ஓட்டி வந்த தனியார் நிறுவன அதிகாரி ஒருவர் படு காயம் அடைந்தார்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த குதிரையையும், தனியார் நிறுவன அதிகாரியையும் கடும் பேராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். இந்த சம்பவம் ஜெய்ப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A horse went berserk because of the heat, broke its harness and crashed through the windshield of a car in Rajasthan’s capital Jaipur, police said on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X