For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புனைபெயரில் 'விவகார' இமெயில்கள் அனுப்பிய எஸ்.ஏ.பி. இந்தியா லேப்ஸ் எம்.டி. ராஜினாமா

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: எஸ்.ஏ.பி. லேப்ஸ் இந்தியாவின் எம்.டி. அனிர்பன் டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

எஸ்.ஏ.பி. லேப்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் அனிர்பன் டே. கடந்த 2008ம் ஆண்டு இந்த நிறுவனத்தில் சேர்ந்த அவர் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் எஸ்.ஏ.பி. இந்தியா லேப்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஆனார். இந்நிலையில் அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் சேரப் போவதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் தனது பதவியை கடந்த வியாழக்கிழமை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்தார். ஆனால் உண்மை தற்போது வெளியே வந்துள்ளது.

எஸ்.ஏ.பி. லேப்ஸில் ஆன்டி என்று அழைக்கப்பட்ட அனிர்பன் டே slicitizen101 என்ற பெயரில் ஊழியர்களுக்கு சில மூத்த அதிகாரிகள் பற்றி குறைகூறி இமெயில்கள் அனுப்பி வந்துள்ளார். அவர் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அந்நிறுவனத்தின் ஊழியர் குறைதீர்ப்பு அமைப்பான ஆர்ஏடபுள்யூவுக்கு இமெயில்கள் அனுப்பி வந்துள்ளார்.

இப்படி ஊழியர்களுக்கும், குறைதீர்ப்பு அமைப்புக்கும் உயர் அதிகாரிகளை பற்றி தவறுதலாக இமெயில்கள் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஜெர்மனியில் உள்ள போர்டு உறுப்பினர்களிடம் தெரிவிக்கப் போகிறேன் என்று ஒரு இமெயில் வந்தவுடன் பெங்களூர் அலுவலக நிர்வாகத்தினர் மகோதேவுபுரா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். நிறுவனத்தில் உள்ள யாரோ தான் இந்த வேலையை செய்கிறார்கள் என்ற சந்தேகத்தில் தான் நிர்வாகத்தினர் போலீசிடம் புகார் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை செய்தபோது அந்த இமெயில்கள் ஆன்டியின் பெங்களூர் வீட்டில் இருந்து அனுப்பப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி அனுப்பப்பட்ட இமெயிலில் கூறியிருப்பதாவது,

நிறுவன வளாகத்தில் ஊழியர் ஒருவர் குற்றம் செய்திருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒருவரை தாக்குவது குற்றம். இந்த குற்றம் நடக்கவே இல்லை என்கிறீர்களா? இல்லை இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவிட்டதா?.

இதற்கு நாம் நேருக்கு நேர் சந்தித்து பேசலாமா? என்று பதில் வர, ஆன்டியோ, சாரி, நான் யார் என்பதை கூற மாட்டேன். அந்த நபர் பெரிய ஆள் என்பதால் அவர் பற்றி குறைதீர்ப்பு அமைப்பு விசாரணை நடத்தாமல் உள்ளது வருத்தம் அளிக்கிறது. ஒன்று இந்த பிரச்சனையை நீங்கள் தீர்த்து வையுங்கள் இல்லை முடியவில்லை என்றால் கூறுங்கள் நான் ஜெர்மனிக்கு எழுதுகிறேன் என்று இமெயில் அனுப்பினார்.

English summary
SAP Labs India MD Anirban Dey quit after he was founding spamming colleagues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X